Jailer 2: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? – வைரலாகும் தகவல்!

Jailer 2 Shooting Update: பான் இந்திய நடிகர்களுக்கே பிடித்த நடிகராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிவருவதுதான் ஜெயிலர் 2. இதை நெல்சன் திலீப்குமார் இயக்கும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Jailer 2: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? - வைரலாகும் தகவல்!

ஜெயிலர் 2 திரைப்படம்

Updated On: 

28 Mar 2026 22:05 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரஜினிகாந்துடன் (Rajinikanth) இணைந்து பணியாற்றிவருபவர்தான் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1 (Jailer 1) படத்தில் ரஜினிகாந்த் லீட் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். ஆக்ஷன், மாஸ், எமோஷனல் என பல்வேறு கதைக்களத்தை கலவையாக இப்படம் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan), மிர்னா மேனன் (Mirna Menon), சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு, ஷாருக்கான் (Shah Rukh Khan) உள்ளிட்ட பல்வேறு பான் இந்திய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், வழக்கம்போல அனிருத்தான் (Anirudh) இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2026 மார்ச் 10ம் தேதியில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. அந்த வகையில் ஏற்கனவே ரஜினிகாந்த் தனது ஷூட்டிங்கை முடித்திருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் இன்று 2026 மார்ச் 28ம் தேதியில் நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எனது ஆதரவு விஜய்க்குதான்.. த.வெ.க.வில் இணைகிறேனா? – பிரபல நடிகை பேச்சு!

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்த எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஜெயிலர் 2 படமானது, 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. அதிலும் இந்த பார்ட் 2 படமானது கேரளாவில் நடைபெறுவதுபோன்று அமைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதில் ரஜினிகாந்துடன் பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் ரஜினிகாந்திற்கு கூலி படத்தை அடுத்ததாக ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்ட படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அதன்படி இப்படத்தை வரும் 2026 ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதே தேதியில் கூலி படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் நிறைவடைந்தால் இன்னும் விரைவாக ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்