கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

KH X RK Film New Poster: கோலிவுட் சினிமாவின் உச்ச நாயகர்களாக இருந்துவருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்களின் கூட்டணியில் புது படம் தயாராகவுள்ள நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் KH X RK படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் KH X RK

Updated On: 

22 Feb 2026 14:44 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர்கள் இருவரின் கூட்டணியில் 70ஸ் மற்றும் 80ஸ் ஆரம்ப கட்டத்தில் பல படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தே தனது முதல் படத்தில் கமல்ஹசானுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படமானது இயக்குநர் கே பாலசந்தர் (K Balachander) இயக்கத்தில் கடந்த 1975ம் ஆண்டில் வெளியான “அபூர்வ ராகங்கள்” (Apoorva Raagangal) . இப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் இணைந்தே நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 47 வருடமாக எந்த படங்களிலும் இவர்களின் காம்போ இணைந்து நடிக்கவில்லை. அந்த வகையில் தற்போது 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. இந்த KHxRK படத்தை பீஸ்ட் , ஜெயிலர் 1 மற்றும் ஜெயிலர் 2 (Jailer 1&2) படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கவுள்ளார்.

மேலும் இதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் புரோமோ நேற்று 2026 பிப்ரவரி 21ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று 2026 பிப்ரவரி 22ம் தேதியில் இப்படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர… ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சிப் பேச்சு

கமல்- ரஜினியின் KH X RK படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் குறித்த பதிவு:

KH X RK திரைப்படத்தை யார் ஹீரோ மற்றும் யார் வில்லன் :

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் இன்பந் உதயநிதி தயாரிக்கும் நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை ரஜினிகாந்த் முடித்த நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம். இப்படமானது வரும் 2026 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் ரஜினிகாந்த், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்திலும் நடிக்கவுள்ளர்.

இதையும் படிங்க: சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!

இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கமல்ஹாசனும், இயக்குநர்கள் அன்பரீவ் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த விதத்தில் KH X RK திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த 2026ம் ஆண்டு இறுதியில் அல்லது 2027ம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்திலும், ரஜினிகாந்த் ஹீரோவாகவும் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்