தொடங்கியது தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங்… வெளியானது அறிவிப்பு

Thaai Kizhavi movie ticket booking is open now: தமிழ் சினிமாவில் வரும் வாரம் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடங்கியது தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங்... வெளியானது அறிவிப்பு

தாய் கிழவி

Published: 

25 Feb 2026 15:31 PM

 IST

தமிழ் சினிமாவில் வருகின்ற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் பலப் படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அந்த வரிசையில் உள்ளது நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். அந்த பெண் நமது மக்கள் அதிகம் பயன் படுத்தும் தல் லைஃப் பாட்டியாக இருப்பது போல படத்தில் இருந்து வெளியான வீடியோ மற்றும் ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்த நிலையில் இந்த தாய் கிழவி படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் சிங்கம் புலி, பால சரவணன், அருள் தாஸ், இளவரசு, முனிஷ்காந்த், முத்துக்குமார், ஜார்ஜ் மேரியன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொடங்கியது தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங்:

இந்த நிலையில் படம் முன்னதாக கடந்த 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு தாய் கிழவி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புக்கிங் தொடங்கியதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் நிச்சயமாக நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரவில்லை – எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Purushan Movie: விஷால் – தமன்னா கூட்டணி : தொடங்கியது ‘புருஷன்’ படத்தின் ஷூட்டிங்!

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!