அதர்வாவின் இதயம் முரளி படம் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்
Idhayam Murali Movie Update : நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து வரும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதயம் முரளி
தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் முரளியின் மூத்த மகன் தான் நடிகர் அதர்வா முரளி. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் அதர்வா முரளி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் அதர்வா முரளி. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு நடிகர் அதர்வா முரளி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்கள் டிஎன்ஏ மற்றும் தனல். இதில் முன்னதாக வெளியான டிஎன்ஏ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தொடர்ந்து ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியான படம் தணல். இதில் நடிகர் அதர்வா முரளி காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த நிலையில் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்திலும் நடிகர் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதயம் முரளி படம் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்:
இதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்துள்ள படம் இதயம் முரளி. இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி முகுந்தன், கயாடு, நட்டி, தமன் எஸ், நிஹாரிகா என்எம், ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின், பிரக்யா, சுதாகர், யஷஸ்ரீ ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆகாஷ் பாஸ்கரன் அளித்தப் பேட்டி ஒன்றில் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது என்றும் படத்தின் தொழில்நுட்பம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Also Read… தமிழ் சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – நடந்தது என்ன?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
— Producer & Director #AakashBaskaran, in a recent interview 🎙️, said:
— For the film #IdhayamMurali, we carried out the shoot using 12 cameras simultaneously 🎥🎥
— The important stunt sequences were filmed using these cameras 💥🤺
— All these shoots were completed in Chennai… pic.twitter.com/GFcpRpmznt— Movie Tamil (@_MovieTamil) December 30, 2025
Also Read… மீண்டும் பிக்பாஸில் வெடித்த பேட் டச் சண்டை… வைரலாகும் வீடியோ!