Kavin Raj : கவினின் புதிய திரைப்படம்.. படக்குழு கொடுத்த அப்டேட்!
Kavins New Film Update : கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின். இவர் தனது நடிப்பில் தமிழில் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்துப் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

நடிகர் கவின் (Kavin) சின்னத்திரை சீரியல் மற்றும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் சின்னதிரையைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளடி பெக்கர் (Bloody Beggar). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தமிழ் ஹிட் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரித்திருந்தார் . கடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தின் ரிலீசின் போதுதான் அமரன் (Amaran) மற்றும் பிரதர் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்றுத் தோல்வியடைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கிஸ் (Kiss). இந்த படத்தைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் (Prince Pictures) தயாரிப்பு நிறுவனத்துடன் புதிய படத்தில் இணையவுள்ளதாகப் படக்குழு தகவலைக் கொடுத்துள்ளது. சர்தார் 2 மற்றும் மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .




பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
We at @Prince_Pictures wish our hero @Kavin_m_0431 a very happy birthday. Lets rock it together this year! 😊🔥@lakku76 @venkatavmedia pic.twitter.com/4Ma0230G3n
— Prince Pictures (@Prince_Pictures) June 22, 2025
இந்த நிலையில் 2025, ஜூன் 22ம் தேதியில் நடிகர் கவினின் பிறந்தநாள் என்ற நிலையில், தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி, புதிய படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் பதிவில், பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்து. இந்த வருடம் எங்களுடன் கொண்டாடுங்கள் என்று படக்குழு புதிய படத்திற்காக அப்டேட்டை கொடுத்துள்ளது. இந்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களைத் தயாரித்து வருகிறது. மேலும் விரைவில் கவினின் புதிய படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்கள் போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிஸ் திரைப்படம் :
நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்திருக்கும் திரைப்படம்தான் கிஸ். இந்த படத்தில் கவின் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்த நிலையில் , இப்படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.