Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூலி திரைப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Coolie Movie First Single Update : தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் 171வது திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Coolie : ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூலி திரைப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
கூலி பட முதல் பாடல் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 23 Jun 2025 18:24 PM

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) . மாநகரம் (Maanagaram) படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, விஜய் (Vijay) , கமல்ஹாசன், ரஜினிகாந்த் (Rajinikanth)  என உச்ச நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. இந்த படமானது ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாகக் கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2024ம் ஆண்டு துவங்கி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. கடந்த 2025, மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த்தின் இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில் இந்த கூலி படத்தின் முதல் பாடலான சிக்கிடு வைப்  (Chikitu Music) பாடல் வரும் 2025, ஜூன் 25ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட கூலி திரைப்பட முதல் பாடல் ரிலீஸ் பதிவு :

கூலி திரைப்படத்தில் பான் இந்திய பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்தின் மகள் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், நாகார்ஜுனா, ஷோபின் ஷாஹிர், ஜூனியர் எம்ஜிஆர், யோகி பாபு, மற்றும் காளி வெங்கட் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தில் ஒட்டுமொத்தமாக இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் காரணமாக இந்தப் படம் பான் இந்திய அளவில் நிச்சயமாகப் பிரம்மாண்ட வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பில் கூலி :

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு முழு ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படம் என்பதால், இப்படத்தின் கதைக்களம் நிச்சயம் பல சுவாரஸ்யங்களுடன் இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மேலும்  பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் இப்படமானது உருவாகியிருக்கும் நிலையில், படத்தின் ஒவ்வொரு பாடல்கள் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.