தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

Love Insurance Kompany: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் தீவாளிக்கு வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல்கள் இணையத்தில் வெளியானது.

தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

Published: 

21 Aug 2025 15:41 PM

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் இயக்கிய லவ் டுடே படத்தில் அவரே நாயகனாக நடித்து இருந்தார். சமூகத்தில் தற்போதையக் காதலை மையமாக வைத்து உருவனா அந்தப் படம் இளைஞர்களிடம் மட்டும் இன்றி அனைத்து தலைமுறையினரிடமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன்.

அதன்படி அவர் இறுதியாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் என்றப் படத்தில் நடித்து இருந்தார். இவர் முன்னதாக ஓ மை கடவுளே என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ட்ராகன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப் படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தீபாவளி ரேஸை உறுதி செய்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு:

ட்ராகன் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, கௌரி ஜி. கிஷன், யோகி பாபு, மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷா ரா, முஹம்மது ரசூல், எடின் ரோஸ் என பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ரௌடி பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. படம் முன்னதாக தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக படக்குழு தற்போது போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை… நடிகை சுவாசிகா ஓபன் டாக்