LIK: 25 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Love Insurance Kompany Collection: பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 4வது படமாக கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படமானது வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில், மொத்தம் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட வசூல்
இயக்குநர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) இயக்கத்தில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டிலே பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) 2வது படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் இப்படத்தின் ஷூட்டிங்கும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இதற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த டிராகன் (Dragon) மற்றும் டியூட் (Dude) போன்ற படங்களே வெளியாகி ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த விதத்தில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தத்த்து. இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்திருந்தார்.
இப்படமானது 2040ம் ஆண்டில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதர்வாவின் பிறந்த நாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடும் இதயம் முரளி படக்குழு
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் 25வது நாட்களில் வசூல்:
இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காதல்கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் வாஸ் என்ற வேடத்திலும், நடிகை க்ரித்தி ஷெட்டி தீமா என்ற வேடத்திலும் நடித்திருந்தார். இந்த ஜோடியானது சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். இதில் நாம் தமிழர் அரசியல் கட்சித் தலைவர் சீமானும் நடித்திருந்தார். அந்த வகையில் இப்படமானது 25 நாட்களில்,உலகமெங்கும் சுமார் ரூ 66.47 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்
லவ் இன்சூரன்ஸ கம்பெனி படக்குழுவின் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட பதிவு:
#LIK 25 days Worldwide GBOC is 66.47cr ❤️🔥
An @anirudhofficial musical 🎵
A #Wikki original
#LIK #LoveInsuranceKompanyStarring @pradeeponelife @IamKrithiShetty @iam_SJSuryah @Gourayy @iYogiBabu@dop_ravivarman @PradeepERagav @muthurajthangvl @PeterHeinOffl… pic.twitter.com/Z0lly37OUt
— Seven Screen Studio (@7screenstudio) May 7, 2026
இப்படமானது வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில், கடந்த 2026 மே 6ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இந்த படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், ஓடிடியில் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.