நான் நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்னு அஸ்வத்திடம் சொன்னேன் – பிரதீப் ரங்கநாதன்!

Actor Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ஹிட் படத்தை கொடுத்தப் பிறகு தனே இயக்கி நடித்து அதுவும் ஹிட் ஆனதும் தற்போது நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். இவர் சமீபத்தில் டிராகன் படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்னு அஸ்வத்திடம் சொன்னேன் - பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன்!

Published: 

30 Jun 2025 10:52 AM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) இந்த படத்தை இயக்க நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan) நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று 100 நாட்களை கடந்தது. இதனை கொண்டாடும் விதமாக டிராகன் படக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த 100-வது நாள் விழாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் பிரதீப் ரங்கநாதன் பேசியது என்ன என்றால், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் அறிமுகப் படமான ஓ மை கடவுளே ஷூட்டிங்கின் போது ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அஸ்வத் என்னை அழைத்தார்.

நடித்தால் ஹீரோ தான் – பிரதீப் ரங்கநாதன்:

ஆனால், நான் அவரிடம் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நட்டிப்பேன் என்றும் மற்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டேன். அதனைத் தொடர்ந்து நான் கோமாளி படத்தை ஒரு இயக்குநராக ஹிட் கொடுத்துவிட்டேன். முதல் படம் ஹிட் ஆகிவிட்டது என்று என்னால் ஆசுவாசப்பட முடியவில்லை.

அடுத்ததாக லவ் டுடே படத்தை நானே இயக்கி நடித்தேன். அதுவும் முதல் படம் போல பதட்டமாக இருந்தது. நான் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் என்பதால். அந்தப் படம் ஹிட் ஆனபிறகு நான் அஸ்வத்திடம் சென்றேன் பிறகுதான் டிராகன் படத்தை கமிட் செய்தோம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பேச்சு:

இந்த 2025-ம் ஆண்டு வெளியாகி தற்போது வரை சூப்பர் ஹிட் அடித்தப் படங்களின் பட்டியளின் டிராகன் படம் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியது போலவே ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!