ரசிகர்களிடையே வைரலாகும் பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்
BANG BANG Movie Title Promo Video | தமிழ் சினிமாவில் ஓஜி கூட்டணி என்று கூறப்படுவது நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் கூட்டணி ஆகும். இந்த கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது.

பேங் பேங் படம்
தமிழ் சினிமாவில் நாயகன்கள் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல காமெடி நடிகர்களுக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது வரை நாயகன்களுக்கு நண்பர்களாகவோ அவர்களுடன் வேலை செய்பவர்களாகவோ காமெடி நடிகர்கள் இணைந்து நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அப்படி தமிழ் சினிமாவில் ஓஜி கூட்டணி என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கூட்டணி பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி. அப்படி இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதுபோல இவர்களின் படங்களில் வெளியான வசங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் தற்போது வரை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கூட்டணியில் வெளியான படங்களின் வீடியோக்கள் தொடர்ந்து மீம்ஸ்களாகவும் ரீல்ஸ்களாவும் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வந்த ஒய் ப்ளட் சேம் ப்ளட் வசனம் மற்றும் ஐயம் யுவர் பெஸ்ட் ஃப்ரண்ட், சிங் இன் தி ரெய்ன் என பல வசனங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவை அனைத்தும் தற்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஓஜி கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களிடையே வைரலாகும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்:
இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் இந்தப் படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்த்ப் படத்தை KRG கண்ணன் ரவியின் தயாரிப்பு நிறுவனமான கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Varanasi: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
நடிகர் பிரபு தேவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#BangBang Title Teaser Out Now
Link: https://t.co/jmHpN8ZJ2C pic.twitter.com/yLzXuEWWrL
— Prabhudheva (@PDdancing) January 30, 2026
Also Read… ஏய் சண்டக்காரா… 10 வருடங்களைக் கடந்தது இறுதிச்சுற்று படம்!