Pooja Hegde : தென்னிந்தியப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – பூஜா ஹெக்டே பேச்சு!
Pooje Hegde About South Indian Cinema : இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் பணியாற்றுவது குறித்து இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே (Pooja Hegde). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி (Coolie) படத்திலும் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில் வெளியான மோனிகா (Monica) என்ற பாடலில், சிறப்பு நடனமாடியிருந்தார். இந்த கூலி படமானது இன்று 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இவர் தளபதி விஜயின் ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தென்னிந்திய சினிமாவில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கூலியில் நடந்த சர்ப்ரைஸ்.. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான் இதுதான்!
தென்னிந்திய சினிமா குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே :
அந்த நேர்காணலில் நடிகை பூஜா ஹெக்டே பல்வேறு விதமான கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். குறிப்பாகத் தென்னிந்திய சினிமாவில் நடிப்பது பற்றி பேசியிருந்தார். அதில் பூஜா ஹெக்டே, “நான் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாகத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்திருந்த வைகுண்டபுரம் படமானது மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் பிரபாஸுடன் நடித்திருந்த ராஹீ ஷாம் படமும் பான் இந்திய அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது” என நடிகை பூஜா ஹெக்டே அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : மாஸ் ஆக்ஷன் காட்சிகள்.. ரசிகர்களை கவர்ந்ததா வார் 2 படம்?
பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் போஸ்ட் :
பூஜா ஹெக்டே நடித்திருக்கும் தமிழ் படங்கள் :
நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தை அடுத்ததாக ஜன நாயகன் படமானது உருவாகியுள்ளது. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக இப்படம் கருதப்படும் நிலையில், இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் . இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 09ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் இவர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறாராம். இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.