ஒன்றாக வெக்கேஷன் சென்ற நடிகைகள் நயன்தாரா – த்ரிஷா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்
Actresses Trisha and Nayanthara: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் சினிமாவில் போட்டிப் போட்டுக்கொண்டாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருப்பதை அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா
தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் நாயகன்களிடையே நடிப்பில் போட்டி நிலவுவது போல நாயகிகள் இடையேயும் நடிப்பில் போட்டி நிலவுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து நாயகன்களிடையே போட்டி நிலவி வருகின்றது. 60களிலும், 80களிலும், 20களிலும் வெவ்வேறான நாயகன்களிடையேயும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து நாயகன்களுக்கு இடையே போட்டி நிலவியது போல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாயகிகளுக்கு இடையேயும் சினிமாவில் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக தற்போது வலம் வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இருவருக்கும் இடையேயும் தொடர்ந்து 2000 ஆண்டு முதல் போட்டி நிலவி வருகின்றது. இது சினிமாவில் மட்டும் இன்றி அவர்களின் ரசிகர்களிடையேயும் நிலவி வருகின்றது.
இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வரும் நிலையில் முன்னதாக இவர்களின் பேட்டியில் நட்பு இல்லை என்பது போல தெரிவித்து இருந்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையேயும் நல்ல உறவு இல்லை என்பது குறித்து தொடர்ந்து பேட்டிகள் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக இவர்கள் இருவரின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒன்றாக வெக்கேஷன் சென்ற நடிகைகள் நயன்தாரா – த்ரிஷா:
அதன்படி நடிகை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காதல் தேசம் படத்தில் வெளியான முஸ்தஃபா முஸ்தஃபா என்ற நண்பர்களின் பாடலையும் பதிவிட்டு இருந்தனர். இவர்கள் இடையே நல்ல உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Also Read… இதுவரை தமிழ் பிக்பாஸில் கோப்பையை வென்றது யார் யார்? அதில் பெண் போட்டியாளர்கள் எத்தனைபேர் தெரியுமா?