வாசூலில் தெறிக்கவிடும் பவன் கல்யாணின் OG படம்… எவ்வளவு தெரியுமா?

They Call Him OG : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தே கால் ஹிம் ஓஜி படம். இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வாசூலில் தெறிக்கவிடும் பவன் கல்யாணின் OG படம்... எவ்வளவு தெரியுமா?

பவன் கல்யாணின் OG

Published: 

29 Sep 2025 18:53 PM

 IST

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் பவன் கல்யாண் (Actor Pawan Kalyan). இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா சார்ந்த தொழிலையே செய்து வருகிறார்கள். தெலுங்கு சினிமாவில் இவர்களும் குடும்பம் மிகப்பெரிய ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. சினிமாவி மட்டும் இன்றி அரசியலிலும் மாஸ் காட்டி வருகின்றார் பவன் கல்யாண். அதன்படி ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராகவும் இவர் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ஓஜி. மேலும் இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இம்ரான் ஹாஷ்மி, சாயிஷா ஷா, அர்ஜுன் தாஸ்,
பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, வெங்கட், ஷாம், சுபலேகா சுதாகர், தேஜ் சப்ரு, சுதேவ் நாயர், ஹரிஷ் உத்தமன், ராகுல் ரவீந்திரன், அபிமன்யு சிங், சவுரவ் லோகேஷ், உபேந்திரா லிமாயே, வின்சென்ட் அசோகன், சலீம் பெய்க், சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஐயங்கார், அஜய் கோஷ், ஜீவா, ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கி இருந்தார்.

வசூலில் பட்டையை கிளப்பும் பவன் கல்யாணின் ஓஜி படம்:

அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் 4 நாட்களில் உலக அளவில் ரூபாய் 252 கோடிகளுக்கு அதிகமாம வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… அசுரன் படத்தில் கென் கருணாஸ் காட்சிகர் ரீ ஷூட் செய்யப்பட்டது – ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன விசயம்

ஓஜி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது புதிய போஸ்டர் – வைரலாகும் பதிவு