Sudha Kongara : இயக்குநர் சுதா கொங்கராவின் பிறந்தநாள்.. ‘பராசக்தி’ படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
Sudha Kongara Birthday Special video : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று 2025, ஜூலை 5ம் தேதியில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பராசக்தி படக்குழு வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான துரோகி (Drohi) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர் சுதா கொங்கரா (Sudha Kongara) . இவர் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம்(Mani Ratnam) உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முதல் திரைப்படமானது பெருமளவு வரவேற்பைக் கொடுக்காவிட்டாலும், அடுத்தடுத்த படங்களின் மூலம் பிரபலமானார். இவருக்கு முதல் அங்கிகாரம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது இறுதிச்சுற்று (Irudhi Suttru). கடந்த 2016ம் ஆண்டு நடிகர் மாதவன் (Madhavan) மற்றும் ரித்திகா சிங் (Ritika Singh) முன்னணி நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை ரீமேக் செய்திருந்தார். இதன் பிறகுதான் இவரின் இயக்கத்திலும் மற்றும் சூர்யாவின் (Suriya) நடிப்பிலும் சூரரைப்போற்று திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது.
இந்த படத்தையே இந்தியில் நடிகர் அக்ஷ்ய்குமார் வைத்து “சர்ஃபிரா” என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்ததை வரவேற்பைக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 25வது படமான பராசக்தி (Parasakthi) படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில், இன்று 2025, ஜூலை 5ம் தேதியில் சுதா கொங்கராவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு பராசக்தி படக்குழுவின் சார்பாகப் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்தான வீடியோவை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சுதா கொங்கரா பிறந்தநாளை முன்னிட்டு டான் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட வீடியோ :
To our #Parasakthi director who is the leading light of our entire team, a big sign of our confidence – wishing @Sudha_Kongara a very happy birthday pic.twitter.com/daUz9fnQ87
— DawnPictures (@DawnPicturesOff) July 5, 2025
சுதா கொங்கராவின் பராசக்தி திரைப்படம் :
இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் தமிழில் புதிய திரைப்படமாக உருவாகிவருவது பராசக்தி. இந்த படத்தில் நடிகராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இவரின் 25வது திரைப்படமாக இப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது 1965ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கவிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதம் இருக்கும் நிலையில், இன்னும் 2 மாதங்களில் நிறைவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தவரும் நிலையில், இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது