Pandiraaj : ‘கதகளி படம் என்னோடதுனு பலபேருக்கு தெரியாது’ – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!
Pandiraaj About Vishal Kathakali Movie Failure : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் தலைவன் தலைவி படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாண்டிராஜ், விஷாலின் கதகளி படம் வரவேற்கப்படாதது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

பாண்டிராஜின் கதகளி படம்
இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு வெளியான பசங்க (Pasanga) படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது பிரம்மாண்ட நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் எதிர்க்கும் துணிந்தவன் (Etharkkum thunindhavan). நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில், இப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்புகளைக் கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக சுமார் 2 வருடங்களுக்குப் பின் உருவாகியுள்ள படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) முன்னணி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், விஷாலுடன் (Vishal) கைகோர்த்த கதகளி (Kathakali) படம் வரவேற்கப்படாதது பற்றிப் பேசியுள்ளார். அவர் அந்த நேர்காணலில் பேசியதை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
கதகளி படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “கதகளி படத்தை நான் மிகவும் விரும்பினேன், ஏனென்றால் அந்த படமானது முழுவதும் ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. அந்த படத்தின் கதை ஒரே நாள் இரவில் நடப்பதுதான். நானும் ஆக்ஷன் படமாக அந்த படத்தை உருவாக்கினேன், ஆனால் 4 படங்களுடன் அது வெளியாகி கவனிக்கப்படாமல் போனது. விஷாலின் கதகளி திரைப்படம் நான் இயக்கிய படமா என நிறையபேருக்கு தெரியாது.
இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆனால் கதகளி படமானது பெரியதாகக் கொண்டாடப்படவில்லையே, ஒருவேளை கொண்டாடப்பட்டிருந்தால் நானும் ஆக்ஷ்ன் கதைகளை இயக்கியிருப்பேன். எனக்கும் குடும்ப கதைக்களம் கொண்ட படம் மட்டுமே பண்ணவேண்டும் ஏற்ற ஆசை எல்லாம் இல்லை, வேறு விதத்திலும் கதைகளைப் பண்ண ஆசைதான். இப்படத்திற்கு அடுத்ததாக மாறுபட்ட கதைக்களத்தில்தான் படம் பண்ணப்போகிறேன், அது குடும்ப படமாக இருக்காது” என இயக்குநர் பாண்டிராஜ் ஓபனாக கூறியுள்ளார்.
பாண்டிராஜ் பேசிய வீடியோ :
#Pandiraj Recent
– #Kathakali Movie is very different style of movie, from my other movies
– The story takes place over a single night.
– People didn’t even realize it was directed by me.#ThalaivanThalaiviipic.twitter.com/j9uoTtzcPW— Movie Tamil (@MovieTamil4) July 18, 2025
தலைவன் தலைவி படத்தின் எதிர்பார்ப்பு :
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தலைவன் தலைவி. இப்படமானது முழுக்க குடும்ப கதைக்களம் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமீபத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகிறது. இப்படமானது குடும்பம் மற்றும் நகைச்சுவை போன்ற கதையில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரீ புக்கிங் வரும் 2025, ஜூலை 22ம் தேதி முதல் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.