Pa.Ranjith: ‘வேட்டுவம்’ படத்தின் கதையை முதலில் அப்படித்தான் எழுதினேன்- பா. ரஞ்சித் பேச்சு!

Vettuvam Movie Update: கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் வேட்டுவம் . இந்த படத்தின் கதை ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தது என்பது குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் ஓபனாக பேசியுள்ளார்.

Pa.Ranjith: வேட்டுவம் படத்தின் கதையை முதலில் அப்படித்தான் எழுதினேன்- பா. ரஞ்சித் பேச்சு!

பா. ரஞ்சித்

Published: 

22 Sep 2025 21:04 PM

 IST

இயக்குநர் பா. ரஞ்சித் (Pa. Ranjith), வெறும் இயக்குநராக மட்டும் இல்லாமல், மற்ற இயக்குநர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான படம் தங்கலான் (Thangalaan). நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பில் வெளியான இப்படம், ஓரளவு மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக, இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் வேட்டுவம் (Vettuvam). இந்த படத்தில் முன்னணி வேடங்களில் நடிகர் ஆர்யா (Arya) மற்றும் அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh) இணைந்து நடித்த வருகின்றனர். இவர்கள் இருவரின் கூட்டணியில், அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படமானது தயாராகிவருகிறதாம். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நாக சைதன்யாவின் மனைவியும், நடிகையுமான சோபிதா துலிபாலா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் வேட்டுவம் படத்தின் கதைக்களம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஈஸ்வரன் இன்னும் இருக்காரா? காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இதோ

வேட்டுவம் படம் பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் பேசிய அவர் வேட்டுவம் படத்தைப் பற்றியும் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் பேசிய பா. ரஞ்சித், ” உண்மையை சொல்லபோனால் வேட்டுவம் படத்தை ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவேண்டும் என்றுதான், ஆரம்பத்தில் கதையை எழுதினேன். இந்த படத்தின் ஸ்கிரிப்டை முழுவதுமாக முடித்த பிறகு, இந்த படத்தின் மூலம் என்ன சொல்லப்போகிறேன் என யோசித்தபோது, இது ஒரு கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்த்தேன்.

இதையும் படிங்க : குஷி படத்தின் கதை சொல்லும்போது விஜய் சாரின் ரியாக்ஷன் இதுதான் – எஸ்.ஜே. சூர்யா சொன்ன விஷயம்!

வேட்டுவம் படம் பற்றி பா.ரஞ்சித் பேசிய வீடியோ பதிவு

இந்த படத்தில் என்ன கருத்தை சொல்ல முயற்சிசெய்திருக்கிறேன் என்று சொல்லப்போனால், பவர் ஷேரிங்தான். படத்தின் கதை பவர் ஷேரிங் என்றுதான் என தெரிந்தவுடன், படத்தின் கதையை அப்படியே விட்டுவிட்டு, கதாபாத்திரங்களும் மீது தீவிரமாக கவனம் செலுத்தினேன். மேலும் தற்போது வேட்டுவம் படமானது ஒரு சைன்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிவருகிறது” என இயக்குநர் பா. ரஞ்சித் அந்த நேர்காணலில் பேசியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.