OTT Movies: 2 மணி நேரமும் விறுவிறுப்பு.. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்!

Best Crime Thriller Movies: ஜஸ்டின் டிம்பர்லேக், பெனிசியோ டெல் டோரோ நடித்த Reptile, 2023ல் வெளியான க்ரைம் திரில்லர் படமாகும். முன்னாள் காதலியின் கொலை செய்யப்பட்ட நிலையில் அதன் விசாரணையில் சிக்கிய ஜஸ்டின் மீது சந்தேகம் எழுகிறது. நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்தப் படம், அதிரடி திரைக்கதை கொண்டது என பாராட்டைப் பெற்றுள்ளது.

OTT Movies: 2 மணி நேரமும் விறுவிறுப்பு.. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்!

Reptile படம்

Published: 

10 Jun 2025 09:30 AM

ஓடிடி தளங்கள் வந்து விட்ட பிறகு பல மொழி திரைப்படங்களையும் பார்க்கும் அற்புதமான வாய்ப்பு திரைப்பட ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இதில் பல வகை படங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் Reptile படமானது 2023 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் திரில்லர் படமாகும். கிராண்ட் சிங்கர் இயக்கிய இப்படத்திற்கு பெஞ்சமின் ப்ரூவர் மற்றும் பெனிசியோ டெல் டோரோ ஆகியோர் திரைக்கதை எழுதியிருந்தனர். இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஜஸ்டின் டிம்பர்லேக்,எரிக் போகோசியன்,மாடில்டா லூட்ஸ்,அலிசியா சில்வர்ஸ்டோன், அட்டோ எசாண்டோ, டெல் டோரோ, மைக்கேல் பிட், டொமெனிக் லோம்பார்டோஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைக்கேல் ஜியோலாகிஸ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்தில் இசையமைப்பாளராக யாயர் எலாசர் குளோட்மேன் பணியாற்றியிருந்தார். இந்த படத்தின் கதை, எந்த ஓடிடி தளத்தில் காணலாம் உள்ளிட்ட தகவல்களை நாம் பார்க்கலாம்.

படத்தின் கதை

ஹீரோவான ஜஸ்டின் டிம்பர்லேக் தனது முன்னாள் காதலியான மாடில்டா லூட்ஸ் ஒரு கிராமப்புற வீட்டில் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை காண்கிறார். அந்த வீடு ரியல் எஸ்டேட்காரர்களால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடமாகும். இந்த வழக்கிற்காக துப்பறியும் நிபுணர்களாக பெனிசியோ டெல் டோரோ, அடோ எசாண்டோ ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஜஸ்டினிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். அவரோ தான் மாடில்டாவை திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அவர் கார்ல் க்ளுஸ்மேனை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் காணாமல் போகின்றது. இதனால் இந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என யூகிக்க முடியாமல் திணறும் போலீசாருக்கும், ஹீரோவுக்கு அடுத்தடுத்து எதிர்பாராத தகவல்கள் கிடைக்கிறது.ஒரு கட்டத்தில் ஜஸ்டின் தான் இந்த கொலையை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதன்பிறகு என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள் 

இந்த படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. இந்த படம் முதல்முறையாக 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் அக்டோபர் 6 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவியதால்  செப்டம்பர் 22 ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  அதன்பின்னர் செப்டம்பர் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

இந்த படம் ஓடிடி தளத்தில் ஒரு வாரத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது. படத்தின் திரைக்கதை சூப்பராக அமைக்கப்பட்டிருந்தாலும் சரியான நடிகர்களை தேர்வு செய்யவில்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்தது. விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பு ரசிகர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த Reptile படத்தைப் பார்த்து மகிழுங்கள்.