OTT Movies: அடுத்தடுத்து ட்விஸ்ட்.. சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற படம்!

Best Movies in OTT: ஸ்பைடர்ஹெட், 2022ல் வெளியான சயின்ஸ் ஃபிக்‌ஷன் கொண்ட திரில்லான படமாகும். இது இரசாயனங்களைப் பயன்படுத்தி உணர்வுகளை கட்டுப்படுத்தும் சிறைச்சாலை கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மைல்ஸ் டெல்லர் ஆகியோர் நடித்த இப்படம் சிறந்த திரைக்கதைக்காக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

OTT Movies: அடுத்தடுத்து ட்விஸ்ட்.. சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற படம்!

Spiderhead படம்

Published: 

11 Jun 2025 09:30 AM

 IST

சினிமா என்பது பலவித ஜானர்கள் நிறைந்தது. காதல், ஆக்‌ஷன், சயின்ஸ் ஃபிக்‌ஷன், க்ரைம் திரில்லர் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் கற்பனைகளும், தொழில் நுட்பமும் நிறைந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களங்கள் நமக்கே ஆச்சரியத்தை உண்டாக்கும். அந்த வகையில் ஹாலிவுட்டில் (Hollywood) 2022 ஆம் ஆண்டு வெளியான Spiderhead படம் பற்றி பார்ப்போம். ஜோசப் கோசின்ஸ்கி இயக்கிய இந்த படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் , மைல்ஸ் டெல்லர், ஜர்னி ஸ்மோலெட்,டெஸ் ஹாப்ரிச்,ஆங்கி மில்லிகென் என பலரும் நடித்திருக்கின்றனர். கிளாடியோ மிராண்டா ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ஜோசப் டிராபனீஸ் இசையமைத்துள்ளார். 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் (Netflix)  ஓடிடி தளத்தில் காணலாம்.

படத்தின் கதை

ஸ்பைடர்ஹெட் எனப்படுவது இரசாயனங்களின் விளைவுகளை பரிசோதிக்கும் ஒரு அதிநவீன சிறைச்சாலையை குறிப்பதாகும். அங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் தங்கள் தண்டனைக் காலத்தைக் குறைக்கும் நோக்கில் அங்குள்ள சிறைச்சாலைகளில் வாழும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளும் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். இந்த திட்டத்திற்கு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மைல்ஸ் டெல்லர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக இருக்கிறார்கள். அங்கு கைதிகளுக்கு செலுத்தப்படும் ரசாயன மருந்துகள் அவர்களின் உணர்வுகளை சிதைத்து வேறு மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது.

இதனைத் தொடர்ந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒரு மருந்தை பெண் அதிகாரி ஒருவர் மீது சோதனை செய்ய எதிர்பாராதவிதமாக அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனால் மிகப்பெரிய குழப்பமும் சந்தேகமும் ஒவ்வொருவருக்கும் உண்டாகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது, உண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்படும் மருந்துகள் எதைச் சார்ந்தவை என்பதே இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள்


2010 ஆம் ஆண்டு எஸ்கேப் ஃப்ரம் ஸ்பைடர்ஹெட் என்ற கதையானது நியூயார்க் நகரில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ரெட் ரீஸ் மற்றும் பால் வெர்னிக் திரைக்கதை எழுத அப்படியாக ஒரு படம் உருவாவதாக 2019ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2020ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்காக இந்த படத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் சுமார் 21.58 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இரண்டு கொரோனா தொற்று முடிந்த பிறகு 2022 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சினிமா விமர்சகர்களிடமிருந்து இப்படம் சிறந்த திரைக்கதை என அந்த காலக்கட்டத்தில் பாராட்டைப் பெற்றது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..