OTT Movies: நொடிக்கு நொடி பயம்.. மிரள வைக்கும் திகில் படம்.. ஓடிடியில் பாருங்க!
Best Horror Movies: 2010 ஆம் ஆண்டு வெளியான "தி லாஸ்ட் எக்ஸார்சிசம்" திரைப்படம், பேய் விரட்டுபவராக நடிக்கும் காட்டன் மார்கஸின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அமானுஷ்ய சம்பவங்கள், படத்தின் திகில் காட்சிகளையும், அதன் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

The Last Excorism படம்
இந்திய சினிமா தொடங்கி உலக சினிமா வரை பேய் படங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்துள்ளது. இருக்கை நுனியில் நம்மை அமர வைக்கும் அளவுக்கு திக் திக் காட்சிகள் நிறைந்த எத்தனையோ படங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. அந்த வகையில் ஹாலிவுட்டில் 2010 ஆம் ஆண்டு வெளியான “தி லாஸ்ட் எக்ஸார்சிசம்” (The Last Exorcism) படத்தைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். டேனியல் ஸ்டாம் இயக்கிய இப்படத்தின் கதையை ஹக் போட்கோ மற்றும் ஆண்ட்ரூ குர்லாண்ட் ஆகியோர் இயக்கியிருந்தனர். சோல்டன் ஹோண்டி ஒளிப்பதிவு செய்ய நாதன் பார் இசையமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க அமானுஷயங்கள் நிறைந்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. இந்த படத்தின் கதை மற்றும் மற்ற சிறப்புகள் பற்றி காணலாம்.
படத்தின் கதை
திரைப்பட தயாரிப்பாளர்களான ஐரிஸ் மற்றும் டேனியல் ஆகிய இருவரும் லூசியானாவின் பேடன் ரூஜில் வாழ்ந்து வரும் காட்டன் மார்கஸ் என்ற துறவியின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்க விரும்புகிறார்கள். அவர் ஒரு பேய் விரட்டுபவர். தனக்கு மாற்றுத்திறனாளியாக மகன் பிறந்த பிறகு நம்பிக்கையை இழந்த மார்கஸ் தங்களுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பும் நபர்களுக்கு போலியாக பேய் ஓட்டுகிறார். இதனிடையே விவசாயி லூயிஸ் ஸ்வீட்ஸர் என்பவர் தன்னுடைய மகள் நெல்லுக்கு பேய் பிடித்திருப்பதாக காட்டன் மார்கஸை அழைக்கிறார். வழக்கம்போல போலியாக பூஜை செய்து அந்தப் பேயை விரட்டிவிட்டதாக கூறுகிறார். அன்றிரவு நெல் மார்கஸ் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் தோன்றுகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக காட்டன் மார்கஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் எல்லாம் சரியாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். நெல்லுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில் மார்கஸ் எப்படி அந்த பேய் தாக்கத்திலிருந்து நெல்லை காக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இந்த படத்தில் காட்டன் மார்கஸாக பேட்ரிக் ஃபேபியனும், நெல் மார்கரெட்டாக ஆஷ்லே பெல்லும், லூயிஸ் ஸ்வீட்ஸராக லூயிஸ் ஹெர்தமும் நடித்திருந்தனர்.
படத்தின் சிறப்புகள்
The Last Exorcism (2010)#nw #NowWatching pic.twitter.com/xfQ0Boyxgf
— Mavi Ojeli Kız 🏳️🌈 (@Mavi_ojeli_kiz) April 16, 2024
The Last Exorcism படமானது 2010ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி LA எனப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்பட்டது. இந்த படத்தின் போஸ்டர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. ஒரு இளம் பெண் இரத்தம் தோய்ந்த உடையுடன் இருக்கிறாள். அவள் சிலுவையின் கீழ் பின்னோக்கி வளைந்து இருக்கும் புகைப்படம் கடும் கண்டனங்களைப் பெற்றது. இந்த படம் விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக திகில் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் பார்த்து மகிழுங்கள்.