OTT Movies: பரபரப்பான திரைக்கதை.. உறைய வைக்கும் உண்மை.. இந்த படம் பாருங்க!
ஆமி ஆடம்ஸ் நடித்த The Woman in the Window திரைப்படம், ஏ.ஜே. ஃபின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட உளவியல் த்ரில்லராகும். அகோராபோபியாவால் பாதிக்கப்பட்ட ஒரு உளவியலாளரின் கதை இதுவாகும். பக்கத்து வீட்டுச் சம்பவங்களை கண்காணிக்கும்போது, ஒரு கொலை சம்பவத்தில் சிக்கி, அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் கண்டுபிடிக்கிறார்.

The Woman In The Window படம்
உளவியல் ரீதியான த்ரில்லர் படம் என்பது நம் மனதை வெகுவாக பாதிக்கக்கூடியது. அந்த கதை நம்மை சுற்றி நடப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். இருக்கை நுனியில் அமர வைத்து சிந்திக்க வைக்கும். அப்படியான ஒரு படம் தான் ஹாலிவுட்டில் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘The Woman in the Window’. டிரேசி லெட்ஸ் எழுதிய இப்படத்தின் திரைக்கதையை ஜோ ரைட் இயக்கியிருந்தார். இந்த படமானது ஏ.ஜே. ஃபின் எழுதிய The Woman in the Window என்ற பெயரில் புனைவு குற்றக்கதை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் ஆமி ஆடம்ஸ், கேரி ஓல்ட்மேன், ஆண்டனி மேக்கி, பிரெட் ஹெச்சிங்கர், வயட் ரஸ்ஸல், பிரையன் டைரி ஹென்றி,ஜூலியான் மூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். The Woman in the Window படத்துக்கு புருனோ டெல்போனல் ஒளிப்பதிவு செய்ய டேனி எல்ஃப்மேன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை மற்றும் சிறப்பு தகவல்களை நாம் காணலாம்.
படத்தின் கதை
Never a dull moment with Amy Adams as an agoraphobic psychologist in THE WOMAN IN THE WINDOW.
Here’s an exclusive clip from the twisty thriller, which also stars Gary Oldman, Anthony Mackie, Brian Tyree Henry & Julianne Moore. Coming your way May 14. pic.twitter.com/SIkTxkH4Qg
— Netflix Tudum (@NetflixTudum) April 29, 2021
கதைப்படி ஹீரோயினை சுற்றியும் மொத்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆமி ஆடம்ஸ் குழந்தை உளவியலாளர். அவர் கணவரை பிரிந்து மன்ஹாட்டன் பிரவுன்ஸ்டோனில் தனியாக வசித்து வருகிறார். கணவருடன் வசிக்கும் மகளுடன் மட்டும் தினமும் பேசுவது வழக்கம். அகோராபோபியா எனப்படும் பதட்ட நோயால் பாதிக்கப்படும் ஆமி ஆடம்ஸ் தனது இரண்டாவது மாடி வீட்டின் ஜன்னல் வழியாக தான் வசிக்கும் தெருவில் உள்ள மற்ற குடும்பத்தினரின் செயல்களை பார்க்க வைக்கிறது.
இதனால் அகோராபோபியாவுக்கு அதிகப்படியான மருந்துகள் எடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் ஒருநாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் ஆமியை சந்தித்து தனது தந்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகிறான். இதனால் அந்த சிறுவனின் அம்மாவை சந்திக்கும் ஆமி நட்பு கொள்கிறார்.
சில நாட்கள் கழித்து ஓருநாள் இரவில் அந்த சிறுவனின் அம்மா கொல்லப்படுகிறார். ஆமி போலீசுக்கு போன் செய்தும் யாரும் அதனை நம்பவில்லை. வீட்டில் அந்த சிறுவனின் அம்மா உயிருடன் இருக்கிறார். நடந்தது என்ன தெரியாமல் தவிக்கும் ஆமி ஆடம்ஸ்க்கு பின்னர் திடுக்கிடும் பல உண்மைகள் தெரிய வருகிறது. இதுவே இப்படத்தின் கதையாகும்.
இதர தகவல்கள்
2016 ஆம் ஆண்டு இப்படம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2018ல் படக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியானது. படமும் எடுக்கப்பட்ட நிலையில் இரண்டு, மூன்று முறை திருத்தப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஒருவழியாக 2020ஆம் ஆண்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் மேலும் தாமதமானது. இதன் காரணமா ஓடிடி தளங்கள் இப்படத்தை நேரடியாக வெளியிட பரிசீலனை செய்தது. ஒருவழியாக The Woman in the Window படமானது மே 14, 2021 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் காட்சிகளின் அழுத்தங்களுக்காக பாராட்டைப் பெற்றது. வாய்ப்பிருப்பவர்கள் நிச்சயம் இப்படம் பார்க்கலாம்.