ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்

Celebrities Pongal Wishes For Fans : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்படி வரவேற்பு இருக்கிறதோ அதே போல பண்டிகை நாட்களில் பிரபலங்கள் தங்களது புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் பதிவும் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்... வைரலாகும் போட்டோஸ்

பிரபலங்கள்

Updated On: 

15 Jan 2026 16:23 PM

 IST

தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையிலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பண்டிகைக் காலத்தில் படங்கள் வெளியாவது போல புதுப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர்கள் தங்களது பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவுகள் அனைத்தும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருண் விஜயின் பொங்கல் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் நாயகன் மற்றும் வில்லன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அருண் விஜய். இவர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் பொங்கல் கொண்டாட்டம்:

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பராசக்தி படம் தற்போது திரையரங்குகளில் ஓடிடிக்கொண்டிருக்கின்றது. மேலும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சந்தானம் பொங்கள் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக சக்கைபோடு போட்டு வருபவர் நடிகர் சந்தானம். இவர் தனது பொங்கல் பண்டிகைக் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read… மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!

நடிகர் கார்த்தியின் பொங்கல் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வா வாத்தியார் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது பொங்கல் பண்டிகை புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் கவினின் பொங்கல் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்பு நாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் கவின். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read… சுவாரஸ்யமும் த்ரில்லரும் நிறைந்த இந்த மாஸ்க் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்