மலையாள சினிமாவில் கெத்து காட்டும் நிவின் பாலி… சர்வம் மாயா படத்தின் வசூல் இவ்வளவா? வைரலாகும் அப்டேட்
Sarvam Maya Movie Box Office Collection: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான சர்வம் மாயா படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சர்வம் மாயா
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள நிலையில் இயக்குநர் அகில் சத்யன் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஹாரர் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் ரியா ஷிபு, அஜு வர்கீஸ், ஜனார்த்தனன், ப்ரீத்தி முகுந்தன், ரகுநாத் பலேரி, மது வாரியார், அருண் அஜிகுமார், வினீத், மெத்தில் தேவிகா, ஆனந்த் ஏகர்ஷி, ஜெய குருப், அல்தாஃப் சலீம், விஜீஷ், சௌம்யா பாக்யன் பில்லா, ரேஷ்மி போபன், ஸ்ரீகாந்த் பட்ஷோக், நிகண்டன் முரளி, மணிகண்டன்யா முரளி, மணிகண்டன் முரளி, அணியப்பன், சலீம் மரிமயம், அல்போன்ஸ் புத்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
உலக அளவில் 50 கோடிகளை வசூலித்தது சர்வம் மாயா படம்:
இந்த நிலையில் இந்தப் சர்வம் மாயா படத்திற்கு ஃபயர் ஃபிலை ஃபில்ம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் அஜய குமார் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாகி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலக அளவில் ரூபாய் 50 கோடிகளைக் வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… அதுக்கு ஒரு தைரியம் வேண்டும் என்று சுதா கொங்கரா கூறினார் – ரவி மோகன் பேச்சு
நடிகர் நிவின்பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you for making this film your own. My heart is full.❤️
Sarvam Maya✨breaking box office records in theatres near you.
.
.
.#SarvamMaya #SarvamMayaMovie #Akhilsathyan #Fireflyfilms #PrietyMukundhan #AjuVarghese #RiyaShibu pic.twitter.com/cLVn28Ju4p— Nivin Pauly (@NivinOfficial) December 29, 2025
Also Read… Thalapathy Vijay: விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்.. தடுமாறி விழுந்த விஜய்!