Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?

Suriya47 Update: கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் சூர்யா47. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடந்த நிலையில் அதற்குள் பிரபல ஓடிடி நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளதாம்.

Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?

சூர்யா47 படக்குழு

Published: 

10 Dec 2025 22:39 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிவருகிறது. அந்த வகையில் தொடர்ந்து தமிழ் இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றிய சூர்யா, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்களுடன் கைகோர்த்துவருகிறார். இவர் வாத்தி (Vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், மேலும் தற்போது ஆவேஷம் என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில் புது படத்தில் கைகோர்த்துள்ளார். இந்த படமானது தற்காலிகமாக சூர்யா47 (Suriya47) என அழைக்கப்பட்டுவருகிறது.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்னே பிரபல ஓடிடி நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம். அது வேறு எந்த நிறுவனமும் இல்லை நெட்பிளிக்ஸ்தான் (Netflix).

இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ

சூர்யா47 திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோ :

சூர்யா47 படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

இந்த சூர்யா47 படத்தில் நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென் மற்றும் நடிகர் ஆனந்த ராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், இதில் பரிதாபங்கள் பிரபல திராவித் உதவி எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படம் முற்றிலும் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ள நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போதுதான் தொடங்கிய நிலையில் சுமார் ரூ 23 கோடிகளுக்கு இந்த உரிமையை பெற்றுள்ளதாம். மேலும் படம் முழுமையாக தயாரான பிறகு இன்னும் இந்த தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல் ரிலீஸ் உரிமையை திங்க் மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Related Stories
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
Anirudh: விஜய் சாரின் கடைசி ஆடியோ லான்ச்.. நிச்சயமாக தெறிக்க விடுறோம் – அனிருத் பேச்சு!
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..