Nagarjuna : கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம்.. லோகேஷ் கனகராஜை புகழ்ந்த நாகார்ஜுனா!

Nagarjun About Lokesh Kanagaraj : தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகியிருப்பது கூலி படம். இந்த படத்தின் நிகழ்ச்சியின் போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பற்றி நாகார்ஜுனா புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Nagarjuna : கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம்.. லோகேஷ் கனகராஜை புகழ்ந்த நாகார்ஜுனா!

நாகார்ஜுனா மற்றும் லோகேஷ் கனகராஜ்

Published: 

11 Aug 2025 21:23 PM

 IST

இந்திய அளவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் இந்த படமானது உருவாகியுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். ரஜினிகாந்த்துடன், லோகேஷ் கனகராஜ் இணைந்த முதல் திரைப்படம் இந்த கூலி. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பான் இந்திய பிரபல நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna), கூலி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதில் இவர் சைமன் (Simon) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கூலி படத்தில் நிகழ்ச்சி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் நாகார்ஜுனா, மேடையில் கூலி படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அவர், “இந்த ஒரு கூலி திரைப்படமானது, 100 பாட்ஷா திரைப்படத்திற்கு சமம்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூலி படக்குழு வெளியிட்ட நாகார்ஜுனாவின் வீடியோ :

லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் நாகார்ஜுனா பேசிய விஷயம் :

கூலி படத்தில் நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய நாகார்ஜுனா, பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் குறித்தும், பேசியிருந்தார். அதில் நாகார்ஜுனா, “பாட்ஷா படம் நியாபகம் இருக்கா?, ஒரு கூலி.. 100 பாட்ஷாவிற்கு சமம். லோகேஷ் கனகராஜூக்கு மிக்க நன்றி, இந்த படத்தை எனக்கு கொடுத்ததற்காக மிக்க நன்றி. நீங்கள் எனது வீட்டிற்கு வந்தீர்கள், இப்படத்தின் கதையை கூறினீர்கள். உண்மையில் எனக்கா நடிப்பதற்கு வாய்ப்புகளை கொடுத்தீர்கள்? உண்மையாகவா ?.

இதையும் படிங்க : இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!

மேலும் லோகி என்னிடம் இப்படத்தின் கதைக்களத்தை பற்றி தெளிவாக கூறினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எனது மறுபக்கத்தை இப்படத்தின் மூலம் கொண்டு வந்துவிட்டார். மேலும் கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தின் ரோலை அனைவரும் நிச்சயமாக ரசிப்பார்கள். மிகவும் நன்றி லோகேஷ் கனகராஜ், நான் இதுவரையிலும் பணியாற்றிய சிறந்த இயக்குனர்களில் நீங்களும் ஒருவர்” என அந்த நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா பேசியிருந்தார்.