8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது நாங்க நாளு பேரு பாடல் – வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு

Naanga Naalu Peru Lyric Video From Karuppu Movie | நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவதாக நாங்க நாளு பேர் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்த நிலையில் பாடல் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது நாங்க நாளு பேரு பாடல் - வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு

கருப்பு படம்

Published: 

31 Mar 2026 20:09 PM

 IST

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டிலேயே கருப்பு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் 45-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த கருப்பு படத்தை எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, மன்சூர் அலி கான், ஜாபர் சாதிக், சாய் அபியங்கர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திகு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்த நிலையில் தொடர்ந்து படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது நாங்க நாளு பேரு பாடல்:

அதன்படி முன்னதாக காட் மோட் என்ற பாடல் கருப்பு படத்தில் இருந்து முதலாவதாக வெளியான நிலையில் இரண்டாவதாக தற்போது நாங்க நாளு பேரு என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதுவரை 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு வீடியோ வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kiara Advani: அந்த கேரக்டர் ரொம்பவே ஆச்சர்யப்படவைத்தது.. டாக்ஸிக் படம் பற்றி கியாரா அத்வானி பேச்சு!

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கோர்ட் ரூம் ட்ராமாவாக தமிழில் மிஸ் செய்யக்கூடாத இணையதள தொடர்… சரவணனின் நடிப்பில் சட்டமும் நீதியும் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..