Mysskin: ஆண்ட்ரியாவை புகழ்ந்த மிஷ்கின்.. பிசாசு 2 ரிலீஸ் குறித்து அப்டேட்!

Mysskin About Pisasu 2 Movie Release : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகக் கருதப்படுபவர் மிஷ்கின். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் உருவாகி ரிலீசாகாமல் இருக்கும் படம்தான் பிசாசு 2. இந்த படத்தின் ரிலீஸ் பற்றி மிஷ்கின் அப்டேட் கொடுத்துள்ளார்.

Mysskin: ஆண்ட்ரியாவை புகழ்ந்த மிஷ்கின்.. பிசாசு 2 ரிலீஸ் குறித்து அப்டேட்!

பிசாசு 2 திரைப்படம்

Published: 

13 Jun 2025 14:45 PM

 IST

இயக்குநர் மிஷ்கினின் (Mysskin)  திரைப்படங்கள் என்றாலே நிச்சயமாக அதில் பல காரண காட்சிகள் இருக்கும். அவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் நிச்சயமாக ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு உணர்வும் இருக்கும் என்று கூறலாம். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சைக்கோ (Psycho). கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் உருவாகியிருந்த படம்தான் பிசாசு 2 (Pisasu 2). இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரோமையா (Andrea Jeremiah) முக்கிய நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டிலே ரிலீஸாகவிருந்தது.

பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது என்றே கூறலாம். இந்தப் படமானது அமானுஷ்ய திகில் (supernatural horror movie) திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மேலும் சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதில் அவர், “நடிகை ஆண்ட்ரியாவின் சிறந்த நடிப்பிற்காகவே பிசாசு 2 படம் திரைக்கு வரவேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தின் ரிலீஸ் பற்றியும் பேசியிருக்கிறார்.

இயக்குநர் மிஷ்கின் பிசாசு 2 படம் ரிலீஸ் குறித்து பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கினிடம் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் கொடுத்த மிஷ்கின் “இந்த பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தனது சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரின் சிறந்த உழைப்பிற்காகவாவது இந்த படம் நிச்சயமாகத் திரைக்கு வரவேண்டும். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தின் ரிலீஸிற்காக முயற்சியில்தான் இருந்து வருகின்றனர். நிச்சயமாக எனது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெயின் படத்தின் ரிலீஸிற்கு பின், பிசாசு 2 படமும் வெளியாகும் என்று இயக்குநர் மிஷ்கின் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் ரிலீசாகாமல் இருக்கும் திகில் திரைப்படம்தான் பிசாசு 2. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஷாம்னா காசிம் மற்றும் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த திகில் திரில்லர் திரைப்படமானது நிச்சயமாக இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்