Mysskin: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Mysskin About Super Dulex Movie Experience: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் மிஷ்கின். இவரின் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகவும் வரவேற்பை பெற்ற படம் சூப்பர் டீலெக்ஸ். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்த காட்சி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Mysskin: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் - மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

மிஷ்கின்

Published: 

16 Jan 2026 08:30 AM

 IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிஷ்கின் (Mysskin). இவரின் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களில் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். அந்த விதத்தில் இவர் தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2023ம் ஆண்டு தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான லியோ (Leo) படத்தில், முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட 2 படங்கள் காத்திருக்கிறது. அதில் விஜய் சேதுபதி (Vijay sethupathi) மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் டிரெயின் (Train) திரைப்படம். மற்றொன்று ஆண்ட்ரியாவின் நடிப்பில் தயாராகியுள்ள பிசாசு 2 (Pisaasu 2)திரைப்படம்தான்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் முன்பு நேர்காணல் ஒன்றில், சூப்பர் டீலெக்ஸ் (Super Dulex)படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் பேசியது பற்றி தெளிவாக பறக்கலாம்.

இதையும் படிங்க : விஜய் அண்ணாவின் ரசிகனாக அவரின் வெற்றிக்கு எப்போதும் பிரார்த்திக்கிறேன் – ரவி மோகன் பேச்சு!

சூப்பர் டீலெக்ஸ் படத்தில் நடித்தது பற்றி மிஷ்கின் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய மிஷ்கின் , “சூப்பர் டியூலெக்ஸ் படத்தில் எனது மனைவி வேடத்தில் முதலில் நடிகை நதியாதான் நடித்தார். அந்த படத்தில், எனது மகன் கதாபாத்திரம் எதோ தப்புபண்ணும்போது, என்னை நதியா அடிப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த காட்சியின்போது, கேமரா வேறு பக்கம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நான், நதியாவிடம் என்னை கன்னத்தில் அடிப்பதுபோல நடித்தால் அப்பட்டமாக தெரிந்துவிடும். அதனால் உண்மையாகவே அடிங்க என்று கூறினேன்.

இதையும் படிங்க : படையப்பாவில் அந்த கதாபாத்திரத்தில்தான் நான் நடிப்பேன் என மீனா ஒரே அடம் – ரஜினிகாந்த் சொன்ன உண்மை!

அந்த காட்சியின்போது என்னை உண்மையாகவே நதியா அடித்தார். அங்குதான் நான் பெரிய தவறு செய்ததாக உணர்ந்தேன். அந்த காட்சி கிட்டதட்ட 84 டேக் போனது. அந்த காட்சியை கிட்டத்தட்ட 1 நாள் முழுக்க எடுத்தோம். பின் மறுநாள் தயாரிப்பாளருக்கும், நடிகை நதியாவிற்கும் ஏதோ பிரச்சனை என நினைக்கிறேன், அவர் ஷூட்டிங்கில் இருந்து சென்றுவிட்டார். பின் நான்கு நாட்களுக்கு பின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அதே காட்சியை மறுபடியும் எடுக்கவேண்டும் என சொன்னார்.

நதியா சென்றுவிட்டதால், எனது மனைவி வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அவர் அடித்த அடி இருக்கே” என இயக்குநர் மிஷ்கின் சிரித்தபடி, சூப்பர் டீலெக்ஸ் படத்தில் நடித்த சம்பவம் பற்றி ஓபனாக பேசியிருந்தார்.

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்