Santhosh Narayanan: ‘பைசன் படத்தை கண்ணீர்மல்க பார்த்தேன்’: சந்தோஷ் நாராயணன்!

Santhosh Narayanan Praises Bison: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் சந்தோஷ் நாராயணன். இவரின் முன்னணி இசையமைப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. சமீபத்தில் பைசன் படமானது வெளியானது, இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மாரி செல்வராஜ், பா.ரஞ்சித்தைப் பாராட்டி சந்தோஷ் நாராயணன் பதிவை வெளியிட்டுள்ளார்.

Santhosh Narayanan: பைசன் படத்தை கண்ணீர்மல்க பார்த்தேன்: சந்தோஷ் நாராயணன்!

மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன் மற்றும் பா.ரஞ்சித்

Published: 

18 Oct 2025 12:39 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan). இவரின் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் இசையமைப்பில் இறுதியாக தமிழில் “தலைவன் தலைவி” (Thalaivan Thalaivii) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். மேலும் தற்போது பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்கும் வேலையில் இவர் பிசியாக இருந்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில், மாரி செல்வராஜ் (Mari Selvaraj) மற்றும் துருவ் விக்ரம் (Dhruv Vikram) கூட்டணியில் வெளியான பைசன் (Bison). இந்த படத்தை சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தைப் பாராட்டும் விதத்தில் மாரி செல்வராஜ் மற்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் (Pa. Ranjith) குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பான தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். இதில் பைசன் திரைப்படத்தைப் பார்த்த அனுபவம், மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித்துடன் இணையானது பணியாற்றிய தருணங்கள் மற்றும் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெற்றிநடைபோடும் பைசன் படத்தையும் பாராட்டி அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கில்லர் படம் இப்படித்தான் இருக்கும்.. எஸ்.ஜே.சூர்யா அப்டேட்!

பைசன் திரைப்படத்தை பாராட்டி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் சந்தோஷ் நாராயணன், பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பைசன் திரைப்படத்தை பார்த்ததாகவும், இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது கண்ணீர்மல்க காட்சிகள் இருந்ததாகவும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் துருவ் விக்ரமின் பைசன் படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் :

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும், நடிகர் துருவ் விக்ரமின் முன்னணி நடிப்பிலும் வெளியாகியிருந்த திரைப்படம்தான் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தார். இவரால் இருவரின் ஜோடியும் இப்படத்தில் அருமையாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வசூலில் பட்டையை கிளப்பும் காந்தாரா சாப்டர் 1… 2 வார முடிவில் வசூல் எவ்வளவு ?

இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவரும் இப்படமானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.