Sai Abhyankkar: விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் என்னை கடினமாக உழைக்க வைக்கிறது- சாய் அபயங்கர்!

Sai Abhyankkar About Criticism: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் சிறு பட்ஜெட் படத்திலிருந்து, பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வரை இசையமைத்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தன்மீது எழும் விமர்சங்களுக்கு பதில் கொடுத்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sai Abhyankkar: விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் என்னை கடினமாக உழைக்க வைக்கிறது- சாய் அபயங்கர்!

சாய் அபயங்கர்

Published: 

17 Nov 2025 20:24 PM

 IST

தமிழ் சினிமாவில் இளம் வயதிலே மிகவும் பிரபலமான பாடகராக நுழைந்தவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான “கட்சி சேர” (Katchi Sera)என்ற ஆல்பம் பாடலின் மூலம் மக்களிடையே பிரபலமான இவர்,தொடர்ந்து தனி ஆல்பம் பாடல்களை இசையமைத்து பாடியிருந்தார். இவரின் இசையமைப்பில், குரலிலும் வெளியான பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகும் “பென்ஸ்” (Benz)படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும். இப்படம்தான் இவருக்கு தமிழில் முதல் படமாக இருந்தாலும், அதன் பிறகு பணியாற்றிய டியூட் (Dude) மற்றும் பல்டி (Balti) என இரு படங்களும் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. இந்த படத்தின் பாடல்கள் தற்போதுவரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்துவருகிறது.

இளம் இசையமைப்பாளராக இந்த காலத்து மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் தொடர்ந்து பாடல்களை கொடுத்துவருகிறார். இவர் பாடகரான திப்புவின் மகன் என்பதால் இவருக்கு பிரம்மாண்ட படங்களில் வாய்ப்புகள் கிடைக்கிறது என்று பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கெல்லாம் சாய் அபயங்கர் நச் பதிலளித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கலைமாமணி விருது குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம்.. என்ன தெரியுமா?

விமர்சனங்கள் மற்றும் ட்ரோல் குறித்து மனம் திறந்த சாய் அபயங்கர்:

அந்த நேர்காணலில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அவர் பணியாற்றும் படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “என்னை பற்றி சோஷியல் மீடியாக்களில் பல விமர்சனங்கள் வருவது எனக்கு நன்றாகவே தெரியும். கண்டிப்பாக, அவரவர்கள் என்ன கருத்துக்கள் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், அது அவர்களின் சுதந்திரம். ஆனால், நான் எனது படைப்புகளை படங்களின் பாடல்கள் மூலமாகத்தான் நிரூபிப்பேன்.

இதையும் படிங்க: இன்னும் முடியாத ஷூட்டிங்.. கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் தள்ளிபோகிறதா?

என்னை குறித்து வரும் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் என்னை இன்னும் அதிகமாக மற்றும் கடினமாக உழைக்க செய்கிறது. மேலும் இதுவரை எனது இசையமைப்பில் வெளியான டியூட் மற்றும் பல்டி போன்ற படங்களில் எனது பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த படங்களில் மேலும் என்னை நிரூபித்துக்கொண்டே இருப்பேன்” என அதில் விமர்சனங்களுக்கு நச் பத்தி கொடுத்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகவருகிறது.

சாய் அபயங்கரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

சாய் அபயங்கர் தமிழில் சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் மார்ஷல், ராகவா லாரன்ஸின் பென்ஸ், விஜய் சேதுபதியின் புதிய படம் என பல படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!