DSP: ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்… ரசிகர்களிடையே வைரலாகும் புது பட கிளிம்ப்ஸ்!
Devi Sri Prasads Hero Debut: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையமைப்பாளராக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில், தற்போது கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது இவர் நடிக்கும் புது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

எல்லம்மா திரைப்பட கிளிம்ப்ஸ்
தமிழ் சினிமா முதல் தெலுங்கு சினிமாவரை மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad). இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் நடிகர் சூர்யா (Suriya) வரை பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த விதத்தில் இசையமைப்பாளராக மிகவும் பிரபலமான ஒருவராக இவர் இருந்துவருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி மிகவும் பிரபலமாகியிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநரான வேணு யெல்டாண்டி (Venu Yeldandi) இந்தப் படத்தை இயக்கிவரும் நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துவருகிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு படக்குழு “எல்லம்மா” (Yellamma) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் தெலுங்கு கிராமத்து தெய்வத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இன்று 2026 ஜனவரி 15ம் தேதியில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சாய் பல்லவியின் இந்தி அறிமுகம்… ‘ஏக் தின்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் எல்லம்மா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பதிவு :
This is faith.
This is tradition.
And resistance born from the soil ❤️🔥#Yellamma Glimpse out now 🔥#YellammaGlimpse ▶️ https://t.co/uCOzyiTrDdPresenting Rockstar @ThisisDSP who has always rocked your hearts with blockbuster music now in a new avatar 🥁
Under… pic.twitter.com/c30MSLflSn
— Sri Venkateswara Creations (@SVC_official) January 15, 2026
இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் போல இவரும், தற்போது தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த எல்லம்மா படத்தில் இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிரடி ஆக்ஷன் திரில்லர்..வெளியானது தனுஷின் ‘கர’ படத்தின் கிளிம்ப்ஸ்!
இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நிச்சயமாக இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. விரைவில் இதன் ரிலீஸ் குறித்த அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.