தனுஷ் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் – வைரலாகும் வீடியோ!

Music Composer Sam CS: இயக்குநர் எச்.வினோத் தற்போது நடிகர் விஜயை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. இதனை உறுதி செய்யும் விதமாக இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தனுஷ் - எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் - வைரலாகும் வீடியோ!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

Published: 

22 Jul 2025 11:21 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தமிழ் மற்றும் இந்தி மொழிப் படங்களில் பிசியாக பணியாற்றிவரும் நிலையில் அடுத்ததாக அவர் இயக்குநர் எச்.வினோத் (Director H Vinoth) இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சமீபத்தில் தகவல்கள் பரவி வைரலானது. இதனை தற்போது உறுதி செய்யும் விதமாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் அளித்த பேட்டி ஒன்றில் அவர் அடுத்ததாக கமிட்டாகியுள்ள படங்களின் வரிசையை குறித்து பேசினார். அதில் இயக்குநர் எச். வினோத் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு தான் இசையமைக்க உள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் இவர்களின் கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இளம் இசையமைப்பாளர் சாய் அபாயங்கர் உடன் இணைந்து வெளியாகும் மீம்ஸ்கள் குறித்து பேசிய போது நான் படங்கள் இல்லாமல் இல்லை மேலும் சாய் அபாயங்கரின் இசை வேலை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அந்த மாதிரியான மீம்ஸ்கள் தேவையற்றது என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் கவனம் பெரும் சாம் சிஎஸ் பேசிய வீடியோ:

தனுஷ் மற்றும் எச் வினோத் தற்போது பணியாற்றிவரும் படங்கள்:

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக குபேரா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் அடுத்ததாக வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

அதுமட்டும் இன்றி இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்திலும் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Also read… கருப்பன் வரான் வழி மறிக்காதே… சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கருப்பு படத்தின் டீசர்!

அதே போல இயக்குநர் எச். வினோத் தற்போது நடிகர் விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றது.

Also read… இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

விஜயில் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள படம் ஜன நாயகன் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.