மக்களின் மனதை வென்றதா மிடில் க்ளாஸ் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ

Middle Class Movie X Review: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் முனிஷ்காந்த். இவர் தற்போது கதையின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள மிடில் க்ளாஸ் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

மக்களின் மனதை வென்றதா மிடில் க்ளாஸ் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ

மிடில் க்ளாஸ்

Published: 

21 Nov 2025 15:01 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பலப் படங்களில் நடித்துள்ளார் நடிகர் முனிஷ்காந்த் (Actor Munishkanth). இவர் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த சூது கவ்வும், நேரம், முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன் என பலப் படங்களில் காமெடிகளை தற்போது ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் இல்லாமல் நடிகர் முனிஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மிடில் க்ளாஸ். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார். மேலும் மிடில் க்ளாஸ் படத்தை இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், குரேஷி, கோடாங்கி வடிவேலு, ராதாரவி, வேலா ராமமூர்த்தி மற்றும் மாளவிகா அவினாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மிடில் க்ளாஸ் படம் இன்று 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மிடில் க்ளாஸ் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி உள்ள இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்…

மிடில் க்ளாஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

இந்த ஆண்டு வெளியான சிறப்பான படங்களில் மிடில் க்ளாஸ் படமும் ஒன்று. அதன்படி டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்துள்ளது. தமிழகம் முழுவதும் நிறைய திரைகள் உள்ளன. பத்திரிகையாளர்கள் குடும்பத்துடன் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் மிடில் க்ளாஸ் படத்தை ரசித்தார்கள்.

Also Read… அப்போ பிக்பாஸில் இந்த வாரம் ஜெயிலுக்கு போறது இவங்க தானா? வைரலாகும் வீடியோ

மிடில் க்ளாஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

மிடில் க்ளாஸ் படம் ஒரு சிறந்த கம்யூனிசப் படமாக அமைந்துள்ளது. ஆனால் கம்யூனிசத்தின் உண்மையான சாரத்தை மிக அழகான முறையில் பிரதிபலிக்கிறது! இந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா தகுதியானது.

Also Read… கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்

மிடில் க்ளாஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

இந்த ஆண்டின் மனதைத் தொடும், மகிழ்ச்சியான வெற்றிப் படமாக உள்ளது இந்த மிடில் க்ளாஸ் படம். எமோஷ்னல், நகைச்சுவை மற்றும் மிகவும் வலுவான கருத்து நிரம்பிய, உண்மையிலேயே திருப்திகரமான படமாக மிடில் க்ளாஸ் உள்ளது. மேலும் முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இருவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது.

மிடில் க்ளாஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மிடில் க்ளாஸ் படம் இருக்கும். நாம் செய்யும் நன்மை தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் என்பதே இதன் அடிப்படைக் கருப்பொருளாக உள்ளது. மேலும் முனிஷ்காந்தின் கதாப்பாத்திரம் போல நம் வாழ்க்கையில் ஒருவர் நிச்சயமாக இருப்பார்.

மிடில் க்ளாஸ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

மிடில் க்ளாஸ் படத்தில் நடிகர்கள் முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இருவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. படத்தின் முதல் பாதி மிகவும் காமெடியாக இருந்த நிலையில் இரண்டாவது பாதியில் எமோஷ்னலாகவும் இருந்தது. படத்தில் வெளியான பாடல்கள் சிறப்பாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இது உள்ளது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?