காதலா? கெரியரா? நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க… முதல் நீ முடிவும் நீ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Mudhal Nee Mudivum Nee Movie: தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் முதல் நீ முடிவும் நீ. இந்தப் படம் ஓடிடியிலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் எந்த தளத்தில் பாக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

முதல் நீ முடிவும் நீ
தமிழ் சினிமாவில் கடந்த 21-ம் தேதி ஜனவரி மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் முதல் நீ முடிவும் நீ. இந்தப் படத்தை இயக்குநர் தர்புகா சிவா எழுதி இயக்கி இருந்தார். மேலும் தர்புகா சிவா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீத்தா ரகுநாத் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் முதல் நீ முடிவும் நீ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் குமார், கௌதம் CSV, வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், பூர்வா ரகுநாத், அம்ரிதா மாண்டரின், சரஸ்வதி மேனன், ராகுல் கண்ணன், சரண் குமார், ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன், மஞ்சுநாத் நாகராஜன், நரேன் விஜய், ஆனந்த், டாக்டர் பவித்ரா மாரிமுத்து, தர்புகா சிவா, மிர்ச்சி சிவசங்கரி, தாரா, ஜே சுப்பிரமணியன், சித்தார்த், ஜானகி சுரேஷ், சுஷ்மிதா, குணவதி, வி.சுதாகர், ஜானவி, அஸ்லம், ரொமல் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு படத்தின் இயக்குநர் தர்புகா சிவா தான் இசையமைத்து இருந்தார். படம் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
முதல் நீ முடிவும் நீ படத்தின் கதை என்ன?
பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே கிஷன் தாஸ் மற்றும் மீத்தா ரகுநாத் இருவரும் காதலித்து வருகின்றனர். இதில் கிஷன் தாஸிற்கு இசை மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவர் அதனை தனது கெரியராக தேர்ந்தெடுக்கிறார். மேலும் பள்ளியில் படிக்கும் போதே ஒரு சிரிய குழப்பம் காரணமாக காதல் பிரிந்துவிடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் படித்தவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்திக்கொண்ட போது கிஷன் தாஸ் பெரிய இசையமைப்பாளராக இருக்கிறார். மீத்தாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இப்படியான சூழலில் தனது காதலுக்காக ஏங்கும் கிஷன் தாஸிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கிஷன் தாஸ் தனது கெரியரை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லை என்றால் காதலை தேர்ந்தெடுக்க வேண்டும்? இதில் எதை அவர் தேர்வு செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் அப்டம் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!