Mrunal Thakur : தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ பாடலுக்கு வைப் செய்த நடிகை மிருணாள் தாகூர்.. வைரலாகும் வீடியோ!

Mrunal Thakur Viral Video : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை மிருணாள் தாகூர். இவரின் படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mrunal Thakur : தனுஷ் நடிக்கும் இட்லி கடை பாடலுக்கு வைப் செய்த நடிகை மிருணாள் தாகூர்.. வைரலாகும் வீடியோ!

மிருணாள் தாக்கூர்

Updated On: 

30 Jul 2025 11:53 AM

 IST

நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur), பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றே கூறலாம். ஆரம்பத்தில் இந்தி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த இவர், தற்போது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சீதா ராம் (Sita Ram) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியும் கொள்ளையடித்தார்.

மேலும் இவர் சிலம்பரசனுடன் (Silambarasan) படத்தில் இணைவதாகவும் சமீபத்தில் இணையத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷின் (Dhanush) இட்லி கடை (Idly Kadai) படத்தின் “என்ன சுகம்” என்ற பாடலுக்கு, நடிகை மிருணாள் தாகூர் காரில் வைப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பாடலுக்கு, இந்தி நடிகை வைப் செய்கிறாரா எனவும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷன் – நஸ்லேன் நடிப்பில் வெளியானது லோகா படத்தின் டீசர்!

இணையத்தில் வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ :

இந்த வீடியோவில் நடிகை மிருணாள் தாகூர், காரில் கூலாக, தனுஷின் இட்லி கடை படத்தின் என்ன சுகம் என்ற பாடலை கேட்டுக்கொண்டே பேசியிருக்கிறார். மேலும் அவர் அந்த பாடலை தமிழிலும் பாடியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தனுஷின் இட்லி கடை திரைப்படம் :

நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பிலும் இயக்கத்திலும் படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க கிராமத்துக் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க : அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ திரைப்படம்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!

இவரின் இசையமைப்பில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பாடல் வெளியாகியிருந்தது. தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகனின் குரலில் வெளியான இப்பாடலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது . மேலும் இந்த புதிய பாடலுக்கு நடிகை மிருணாள் தாகூர் வைப் செய்திருக்கும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த இட்லி கடை திரைப்படமானது வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.