Mrunal Thakur: ஒரு தமிழ் படம் கூட நடிக்கல.. ஆனால் தமிழில் பேசி விளாசிய மிருணாள் தாக்கூர் – வீடியோ இதோ!

Mrunal Thakur Tamil Speaking Video: பாலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருபவர் மிருணாள் தாக்கூர். இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தமிழை சுலபமாக பேசி அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Mrunal Thakur: ஒரு தமிழ் படம் கூட நடிக்கல.. ஆனால் தமிழில் பேசி விளாசிய மிருணாள் தாக்கூர் - வீடியோ இதோ!

மிருணாள் தாக்கூர்

Updated On: 

25 Mar 2026 19:43 PM

 IST

நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur) பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருகிறார். தற்போது கன்னட மொழிகளிலும் படங்களில் நடிக தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை எந்த படங்களும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் சீரியல் தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு, ஜீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சியில் வெளியான இனிய இருமலர்கள் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம். அதை அடுத்தாக துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான சீதா ராமம் (Sita Ramam) என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் அவர் கவர்ந்திருந்தார். இவரின் நடிப்பில் டகோய்ட் (Dacoit) என்ற படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது.

அந்த விதத்தில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அங்கு நடிகர் அத்வி சேஷுடன் தமிழ் மொழியில் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார். அவர் இதுவரை ஒரு தமிழ் படம் கூட நடித்திடாத நிலையில், அவ்வளவு எளிமையாக தமிழ் மொழியை பேசி அசத்தியுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!

தமிழில் பேசி அசத்திய நடிகை மிருணாள் தாக்கூர் குறித்த வீடியோ பதிவு :

அண்ட் வீடியோவில், தெலுங்கு நடிகர் அத்வி சேஷ் உடன் இணைந்து கலந்துகொண்டிருந்தனர். அப்போது அவர், தமிழில் அவருடன் பேசியிருந்தார். “சென்னையில் படத்தின் ஷாட் நன்றாக வந்தால் பயங்கரம் பயங்கரம் என சொல்லுவார்கள்” என அதில் அவர் பேசியிருந்தார். மேலும் அவர் இதுவரையிலும் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். ஆனால் இன்னும் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அந்த வகையில் அவர் தமிழ் எவ்வளவு எளிதாக பேசுகிறாரே என அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நூறு சாமி படத்திலிருந்து நாளை வெளியாகும் மாய கனவோ பாடல்

தமிழில் அறிமுகமாகிறாரா மிருணாள் தாக்கூர்:

நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது தென்னிந்திய சினிமாவின் பக்கம் திரும்பிவருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாராம். அந்த விதத்தில் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகவுள்ள STR51 திரைப்படத்தில், நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அவர் இந்த படத்தில் நடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..