பிப்ரவரி 14 பலருக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்னு நினைக்கிறேன் – தனுஷ் உடனான திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்
Mrunal Thakur denies wedding rumours: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவரும் நடிகர் தனுஷும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவியது.

மிருணாள் தாக்கூர்
சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவரது நடிப்பில் வெளியான சின்னத்திரை சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான போதே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்த சீரியல்களின் மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மிருணாள் தாக்கூர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மராத்திய மொழியில் வெளியான படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து மராத்தி மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாக்கூர் அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பட விழாக்களில் கலந்துகொள்ளும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் பரவத் தொடங்கியது. இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் பேட்டி ஒன்றில் இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியது வைரலாகி வருகின்றது.
தனுஷ் உடனான திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்:
அதன்படி சமீபத்தில் மிருணாள் தாக்கூர் அளித்தப் பேட்டியில் நீங்க திருமணம் செய்துக்கொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர், நானா?, இல்ல. பிப்ரவரி 14 ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்னு நினைக்கிறேன். ஏன்னா இதை யார் ஆரம்பிச்சதுன்னு எனக்குத் தெரியாது. இப்போ இது ஒரு பயங்கரமான இடமா இருக்கு, ஏன்னா ‘மிருணாள் திருமணத்தை அதிகாரப்பூர்வமா உறுதி பண்ணிட்டாரு’ன்னு சிலர் வதந்திகளைப் பரப்பிட்டுட்டாங்க என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு Vs கர… ஒரே நாளில் தியேட்டரில் மோதும் சூர்யா, தனுஷ் படங்கள்!
இணையத்தில் வைரலாகும் மிருணாள் தாக்கூர் பேச்சு:
#MrunalThakur Denies her wedding rumours with #Dhanush❌#Bharadwaj: Tell me that you are not getting married now❓#MrunalThakur: Me?, nope. I think 14th Feb is going to be 1st April which is April Fools day. Because i don’t know who started this. It’s a scary space right now,… pic.twitter.com/9n2HCRjR4e
— AmuthaBharathi (@CinemaWithAB) February 12, 2026
Also Read… அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதா பயணம் படதிற்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்