மங்காத்தா படத்தை ஏன் ஒத்திவைக்க சொல்லி கேட்கவில்லை… மோகன் ஜி விளக்கம்
Director Mohan G Interview: தமிழ் சினிமாவில் இந்த ஜனவரி மாதம் பலப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த வரிசையில் இயக்குநர் மோகன் ஜி படமும் உள்ள நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மோகன் ஜி
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப் படத்தில் நடிகர் பிரஜின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் திரௌபதி. இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையை கெடுப்பது போல காட்டப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம், பாகாசூரன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அடுத்ததாக திரௌபதி 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மங்காத்தா படத்தை ஏன் ஒத்திவைக்க சொல்லி கேட்கவில்லை:
மங்காத்தா திரைப்படத்தை ஒத்திவைக்குமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைக் ஏன் டேக் செய்யவில்லை என்று பலர் என்னிடம் கேட்டனர். சன் பிக்சர்ஸ் முதலில் அந்தப் படத்தை ஜனவரி 23ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது. அதன் பிறகுதான் நாங்க திரௌபதி 2 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தோம். பிறகு தாணு சார் தெரி படத்தின் வெளியீட்டை அறிவித்தார்.
ஆனால், தாணு சார் எளிதில் அணுகக்கூடியவராக இருந்ததால், இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வரும்போது எங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காது என்பதால், தெறி திரைப்படத்தை ஒத்திவைக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் தயாரிப்பாளர்களின் நலனில் அக்கரை கொண்டவர். அதனால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தார். அதற்காக நான் தற்போது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையத்தில் வைரலாகும் மோகன் ஜி பேச்சு:
“Many asked me why I didn’t tag SunPictures to postpone #Mankatha. SunPictures first announced as Jan 23rd release. As Thanu sir was easily approachable we requested him to postpone #Theri as we won’t get screens when 2 Tier-1 actor films come”
– #MohanGpic.twitter.com/lT3Wk0VQcS— AmuthaBharathi (@CinemaWithAB) January 20, 2026
Also Read… அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா.. பத்மபாணி விருது பெறும் இளையராஜா