Meenakshi Chaudhary: எனது வருங்கால கணவருக்கு அந்த விஷயங்கள் கட்டாயம் இருக்கவேண்டும் – மீனாட்சி சவுத்ரி போட்ட கண்டீஷன்!
Meenakshi Chaudharys Unique Conditions for Future Husband: மீனாட்சி சவுத்ரி நடிப்பில் தொடர்ந்து புது புது படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனது வருங்கால கணவருக்கு எந்த தகுதிகள் எல்லாம் இருக்கவேண்டும் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

மீனாட்சி சவுத்ரி
தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி (Meenakshi Chaudhary). இவர் தமிழில் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான தி கோட் (The GOAT) என்ற படத்தில், ஜீவன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகரித்திருந்தது. இப்படத்திற்கு முன் இவர் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழ் மொழியி விடவும் தெலுங்கு மொழியில் புது புது படங்களில் கதாநாயகியாக இவர் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் உருவகைவருகிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக “அனகனக ஓக ராஜு” என்ற தெலுங்கு படம் வெளியானது.
இது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனது வருக்கால கணவராக வரும் நபருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளர். எது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதுகள் 2025: சிறந்த நடிகை விருதை வென்ற ராஷ்மிகா மந்தனா
தனது வருங்கால கணவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து நடிகை மீனாட்சி சவுத்ரி பேச்சு :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை மீனாட்சி சவுத்ரி, “எனக்கு கணவனாக, என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்கவேண்டும். அவருக்கு சமையல் செய்யவதற்கு தெரிந்திருக்கவேண்டும், எனது துணிகளை துவைக்க தெரிந்திருக்கவேண்டும். மேலும் எனது துணிகளாலுக்கு இஸ்திரி செய்வதற்கும் தெரிந்திருக்கவேண்டும். ஆகமொத்தத்தில் வீட்டிலுள்ள அனைத்தும் வேலைகளையும் கவனிக்கவேண்டும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களே தயாரா?.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட ட்ரெய்லர்!
இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக இருந்துவருகிறது. நடிகை மீனாட்சி சவுத்ரியை திருமணம் செய்வதற்கு இத்தனை தகுதி வேண்டுமா? என்றும் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தெலுங்கில், நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக வ்ருஷாகர்மா என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தமிழிலும் இவர் புது படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருவதாக கூறப்படுகிறது.