உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் – கொண்டாட்டத்தில் படக்குழு

Bison Kaalamaadan Movie Collection Update: இயக்குநர் மரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் - கொண்டாட்டத்தில் படக்குழு

பைசன் காலமாடன்

Published: 

12 Nov 2025 13:27 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி இருதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து இந்தியாவிற்காக கபடி விளையாடி தங்கம் வென்று கொடுத்த மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் மனத்தி கணேசனின் கதாப்பாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தார். பிரபல நடிகர் விக்ரமின் மகனாக துருவ் விக்ரம் முன்னதாக இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் இந்த பைசன் காளமாடன் படம் தான் தனது முதல் படம் என்று அறிவித்தார்.

அதற்கு காரணம் இவர் முன்னதாக நடித்த இரண்டு படங்களில் ஒன்று ரீமேக் மற்றொன்று அவரது தந்தை நாயகனாக நடித்தப் படத்தில் நடித்து இருந்தார். இதன் காரணமாகவே நடிகர் துருவ் விக்ரமிற்கு இந்த பைசன் காளமாடன் முதல் படம் என்று கூறுகிறார். தொடர்ந்து இந்தப் படம் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன்:

இந்தப் படம் திரயரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 70 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் படக்குழு வெற்றியைக் கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… நெபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான் – வைரலாகும் வீடியோ

பைசன் காளமாடன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தேரே இஸ்க் மெய்ன் படத்தின் புரமோஷனுக்காக மும்பை வந்த தனுஷ்!