Manju Warrier: சோல் ஆன் ஃபயர்.. அஜித் குமாரை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட மஞ்சு வாரியர்!
Manju Warriers Viral Post: தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் மஞ்சு வாரியர். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அஜித் மற்றும் மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கிவருபவர் மஞ்சு வாரியர் (Manju Warrier). இவர் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து பிரபலமாகிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் அசுரன் (Asuran), வேட்டையன் (Vettaiyan), விடுதலை 2 மற்றும் துணிவு (Thunivu) போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தொடர்ந்து புது படங்களிலும் நடித்துவருகிறார். இவர் தமிழில் தற்போது மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கியுள்ள நிலையில், ஆர்யா (Arya) கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது உருவாகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து புது படங்களில் நடிப்பதற்கு இவர் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் தற்போது சினிமாவிலிருந்து சின்ன பிரேக் எடுத்த மஞ்சு வாரியர், சிங்கிளாக பல இடங்களை சுற்றிவருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் துபாய் (Dubai) சென்றிருந்த நிலையில், தல அஜித் குமாரை (Ajith Kumar) நேரில் சந்தித்துள்ளார். நடிகர் அஜித் குமார், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவரும் நிலையில், அவரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து நெகிழ்ச்சி இன்ஸ்டாகிராம் பதிவை நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜயிடம் ஒரு கதை கூறினேன்… ஆனால் – இயக்குநர் பா ரஞ்சித் சொன்ன விசயம்!
அஜித்தை சந்தித்தது குறித்து மஞ்சு வாரியர் தெரிவித்த விஷயம் :
அந்த பதிவில் நடிகை மஞ்சு வாரியர், “உங்கள் ஆன்மாவின் சக்தியை அதிகரிக்க, என்ன செய்கிறீர்கள் என்பதை காட்டியதற்கு நன்றி அஜித் குமார் சார். உங்கள் ரேஸ் காலத்தில் எங்களை அனுமதித்து, சிலிர்பையும், உற்சாகத்தையும் அருகில் பார்ப்பதற்கு, போதுமான கருணை காட்டியதற்கு நன்றி. இது எனக்கும் ஒரு அனுபவமாக இருந்தது” என அதில் தெரிவித்துள்ளர்.
இதையும் படிங்க: பல கட்டுப்பாடுகள்.. ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் இதுதான் – பிரியங்கா சோப்ரா!
அஜித் குமாரை நேரில் சந்தித்தது குறித்து நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
நடிகர் அஜித் குமாரை கடந்த சில மாதங்களோ, தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சந்தித்துவருகின்றனர். அதிலும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் சிறுத்தை சிவா, அனிருத், ஸ்ரீலீலா , ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் என பல்வேறு பிரபலங்கள் நேரில் சந்தித்திருந்தார். அந்த வகையில் தற்போது நடிகை மஞ்சு வாரியரும் அஜித்தை நேரில் சந்தித்து, அவரின் கார் ரேஸ் பணியற்சி அனுபவத்தை தெரிந்துகொண்டுள்ளார். அஜித் குமார் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் இருக்கும் நிலையில், விரைவில் தனது AK64 பட ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.