Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arya: வெற்றிக்காக காத்திருக்கும் ஆர்யா.. மிஸ்டர் எக்ஸ் ரிலீஸ் அப்டேட் இதோ!

Arya Mr. X Movie Update : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

Arya: வெற்றிக்காக காத்திருக்கும் ஆர்யா.. மிஸ்டர் எக்ஸ் ரிலீஸ் அப்டேட் இதோ!
மிஸ்டர் எக்ஸ் திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 10 Apr 2025 13:45 PM

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆர்யா (Arya). இவர் இறுதியாக காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்  ( Kathar Basha Endra Muthuramalingam) என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தைப் பிரபல தமிழ் இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் சிறப்புக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக நடிகர் சந்தானத்தின் (Santhanam) டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திலும் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகனாக இவர் நடித்து வரும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ் (Mr. X) .

இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கி வருகிறார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு மே மாதத்தில் இறுதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் :

நடிகர் ஆர்யா முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் இப்படத்தில் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், காளி வெங்கட், அதுல்யா ரவி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆர்யாவின் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீ வினீத் ஜெயின் மற்றும் எஸ் லக்ஷ்மன் குமார் இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் கதைக்களமானது ராணுவ உளவாளிகளைக் குறித்து முற்றிலும் ஆக்ஷ்ன் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஆர்யா ரகசிய ராணுவ உளவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் கண்டிப்பாக மக்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.