மற்ற மொழிகளை விட தமிழ் சினிமாவில் நடிப்பது எப்பவும் பெருமையானது – நடிகை மம்தா மோகன்தாஸ்
Mamta Mohandas: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் சமீபத்தில் தமிழ் சினிமா குறித்து பேசியது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மம்தா மோகன்தாஸ்
மலையாள சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான மயூக்கம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை மம்தா மோகன்தாஸ் (Actress Mamta Mohandas). அதனைத் தொடர்ந்து மாலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிவப்பதிகாரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மம்தா மோகன்தாஸ் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை மம்தா மோகன் தாஸ் நடிப்பில் பலப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
அந்த வகையில் நடிகை மம்தா மோகன் தாஸ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான குரு என் ஆளு, தடையறத் தாக்கு, எனிமி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகை மம்தா மோகன் தாஸ் நடிப்பில் வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிப்பது எப்பவும் பெருமையான:
இந்த நிலையில் நடிகை மம்தா மோகன் தாஸ் தற்போது மை டியர் சிஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் அருள் நிதி நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மம்தா மோகன் தாஸ் அவருக்கு அக்காவாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் பேசுகையில் இந்தப் படத்தில் அசாத்தியமான ஒரு பெண்ணின் கதையில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எப்போதும் எனக்கு என்று ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார்கள். அதை எப்போது காப்பாற்ற பாதுகாப்பேன் என்றும் நடிகை மம்தா மோகன் தாஸ் தெரிவித்து இருந்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து குறிப்பிடத்தக்கது.
Also Read… ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்
நடிகை மம்தா மோகன் தாஸ் வெளியிட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்