மம்முட்டி – மோகன்லால் நடிப்பில் பேட்ரியாட் படத்தின் நியூ ரிலீஸ் எப்போது… அப்டேட் இதோ

Mammootty and Mohanlal's Patriot Movie Release Update Viral On Social Media: நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து உள்ள படம் பேட்ரியாட். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மம்முட்டி - மோகன்லால் நடிப்பில் பேட்ரியாட் படத்தின் நியூ ரிலீஸ் எப்போது... அப்டேட் இதோ

பேட்ரியாட்

Updated On: 

01 Apr 2026 19:45 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் போட்டி நடிகர்கள் என்று ரசிகர்கள் கூறினாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஆரம்ப காலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இவர்களின் கூட்டணி அமையவில்லை என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது உருவாகி உள்ள படம் பேட்ரியாட். மலையாள சினிமாவில் இராண்டு ஜாம்பவான்களின் கூட்டணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் மலையாள திரையுலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளனர்.

அதன்படி இந்த பேட்ரியாட் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன், கிரேஸ் ஆண்டனி, பிரகாஷ் பெலவாடி, தர்ஷனா ராஜேந்திரன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புது ரிலீஸ் தேதியை அறிவித்தது பேட்ரியாட் படக்குழு:

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர்களை முன்னதாக படக்குழு வெளியிட்டு வந்த நிலையில் படம் ஏப்ரம் மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள த்ரிஷ்யம் 3 படம் மே மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… எதிர் நீச்சல் – காக்கிச்சட்டை படங்கள் தனுஷ் சாருக்காக எழுதினேன்… இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் பேச்சு

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க கூப்பிட்டா போகமாட்டேன் – ஆண்டிரியா ஓபன் டாக்

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..