அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!

Actor Tovino Thomas: மலையாள சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துள்ளார். இவருக்கு மலையாள சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் - நடிகர் டொவினோ தாமஸ்!

டொவினோ தாமஸ்

Published: 

30 Aug 2025 01:24 AM

மலையாள சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பிரபுவிண்டே மக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் டொவினோ தாமஸ் (Actor Tovino Thomas). அதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு வரை பலப் படங்களில் இரண்டாம் நாயகனாகவே நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கோதா படத்தின் மூலம் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை நாயகனாக கொடுத்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியான மாயநதி, அபியுதே கதை அனுவின்தேயும், மரடோனா, தீவண்டி, என்டே உம்மண்டே பெரு, லூகா, கல்கி, எடக்காடு பட்டாலியன் 06, தடயவியல், கிலோமீட்டர் மற்றும் கிலோமீட்டர், கலா, மின்னல் முரளி, தல்லுமாலா, 2018, அன்பேஷிப்பின் கண்டேதும் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இவர் நாயகனாக நடித்து வெளியான படம் நரிவேட்ட. இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிகர் டொவினோ தாமஸ். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்  பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான லோகா படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எப்போ நடிப்பேன்னா? டொவினோ சொன்ன விசயம்:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் டொவினோ தாமஸிற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் கரகோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாரி 2 படத்தில் வில்லனா நடிச்சீங்க. எப்போ நேரடி தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பீங்க என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் டொவினோ தாமஸ் தமிழில் நிறைய திரமையான நடிகர்கள் இருக்காங்க. எனக்கு தமிழில் வரும் கதை எப்படி இருக்கனும் என்றால் இந்தப் படத்தில் நான் தான் கண்டிபா நடிக்கனும்னு எனக்கு ஒரு ஃபீல் வரனும். அப்படி ஒரு படத்தில் தான் நடிப்பேன் என்றும் தற்போது மலையாளத்தில் பிசியாக நடித்து வருவதாகவும் நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

Also Read… நெட்ஃபிளிக்ஸில் ஸ்கேட்டர் கேர்ள் என்ற ஸ்போர்ஸ் படத்தை பார்க்காமல் தவறவிடாதீர்கள்

டொவினோ தாமஸின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!