மலையாளம் டூ தமிழ்.. இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுவன் யாருனு தெரியுமா? ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய முழுவதும் பிரபலமானவர்!
Malayalam Actor Childhood Photo: தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில், நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது தெரிந்ததே. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில், கழுத்தில் டை காட்டியபடி, கியூட்டாக இருக்கும் பள்ளி சிறுவன் எந்த நடிகர் என தெரிகிறதா? மலையாள நடிகராக இருந்தாலும், தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

மலையாள நடிகரின் சிறுவயது புகைப்படம்
சமூக ஊடகங்களில் வளர்ச்சி அதிகமான நிலையில், சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவர் அவர்களின் கைபேசியிலே இருக்கிறது. அந்த வகையில் சினிமா பிரபலங்களில், அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் மேலே உள்ள புகைப்படத்தில், கியூட்டாக கழுத்தில், டை அணிந்து இருக்கும் பள்ளி சிறுவன் எந்த மலையாள நடிகர் (Malayalam Actor) என தெரிகிறதா?. இவர் சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் நுழைந்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டில் இயக்குநரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் (Vineeth Sreenivasan) இயக்கத்தின் வெளியான படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர். இந்த படத்திற்கு பிறகு, அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren) இயக்கத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. ஆனாலும் தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவந்த இவருக்கு, ஒரே படம் ஒட்டுமொத்த பிரபலத்தையும் கொடுத்திருந்தது. அதில் இருக்கு மூன்று நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தனர். அதில் ஒன்று சாய் பல்லவி (Sai Pallavi). இப்போது தெரிந்திருக்கும் இந்த நடிகர் யார் என்று. இந்த கியூட் சிறுவன் நடிகர் நிவின் பாலிதான் (Nivin Pauly).
இதையும் படிங்க: ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சிதான் அது – சூர்யா பகிர்ந்த விஷயம்!
நடிகர் நிவின் பாலி பகிர்ந்திருந்த போட்டோஷூட் பதிவு:
நடிகர் நிவின் பாலி கடந்துவந்த சினிமா பயணம் :
நடிகர் நிவின் பாலி கடந்த 2010ம் ஆண்டில் வெளியான “மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்” என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார். இதில் அவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், இதையடுத்து துணை கதாபாத்திரங்கள், அல்லது மல்டி ஹீரோ இருக்கும் படங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நேரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: இந்தியாவிலே சிறந்த நடிகை சாய் பல்லவி.. ஏக் தின் படத்தை பார்த்து கண்கலங்கிய அமீர்கான்!
இதில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக வர நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிற்ப வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் இவருக்கு ஒரு ஹீரோவாக அங்கீகாரம் கொடுத்த படம் பிரேமம். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இப்படத்திற்கு பிறகு, இவர் லீட் ஹீரோவாகவே படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக சர்வமும் மாயா என்ற படமானது வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் இவர் தமிழில் புதிதாக பென்ஸ் என்ற படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.