குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக படக்குழு மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படமும் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு படங்களில் குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் அஜித் குமாரின் முந்தைய படங்களில் ஹிட் அடித்த காட்சிகளை ரீ கிரியேட் செய்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுட்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்த நிலையில் வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்து இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பழையப் பாடல்களும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதில் இளையராஜாவின் பாடல்கள் மூன்று பயன்படுத்தப்பட்டு இருந்தது.
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த கட்டா குஸ்தி… 2-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்
குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அந்தப் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் அந்தப் பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயந்தபடுத்த தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாடல்களை பயன்படுத்த தடை வித்து இருந்தது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் அளித்தது. அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
Also Read… ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ