Lokesh Kanagaraj: விஜய்யிடம் 2 படத்திற்கு கதை கூறிவிட்டேன் – லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj About Leo 2 And Master 2 : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில், தளபதி விஜய்யுடன் 2 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், இந்த படங்களின் தொடர்ச்சி கதைகளையும் அவர் விஜய்யிடம் கூறியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Lokesh Kanagaraj: விஜய்யிடம் 2 படத்திற்கு கதை கூறிவிட்டேன் - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய்

Published: 

09 Aug 2025 07:58 AM

கோலிவுட் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும், உச்ச நடிகர்களுடன் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ (Leo). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) கதாநாயகனாக நடித்திருந்தார். அதிரடி கேங்ஸ்டர்ஸ் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான அதிரடி கதைக்களத்துடன் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த நெகடிவ் விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், சுமார் ரூ.600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து கூலி (Coolie) படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படமானது வரும் 2025,ஆகஸ்ட் 14ம் தேதி முதல், பான் இந்திய மொழிகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது , இந்நிலையில், சமீபத்தில் கூலி படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர், விஜய்யிடம் லியோ 2 (Leo 2) மற்றும் மாஸ்டர் 2 (Master 2) போன்ற படங்களின் கதைக்களம் பற்றிக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : தேசிய விருது.. வெற்றிபெற்ற தமிழ் பிரபலங்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

லியோ 2 மற்றும் மாஸ்டர் 2 படங்களைக் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :

அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “நான் மாஸ்டர் 2 திரைப்படத்திற்கான கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறேன். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஜேடி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் லியோ 2 திரைப்படத்திற்கான கதையையும் அவரிடம் கூறியிருக்கிறேன். லியோ படத்தின் கதையை எழுதும்போதே, லியோ 2 படத்திற்கான கதையையும் எழுதியிருந்தேன். அது யுனிவர்ஸ் படம் என்பதால், விஜய்யின் கதாபாத்திரத்தை மேலும் விரிவாக்கலாம் என யோசனை இருந்தது.

லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் படங்கள் பற்றி பேசிய வீடியோ :

இதையும் படிங்க : தொடரும் வசூல் வேட்டை.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட 2வது நாள் வசூல் விவரம் இதோ!

ஏனென்றால் அவரின் கதாபாத்திரத்திற்குள் கடைசி வரைக்கும் ஒரு மர்மம் இருக்கிறது. லியோ 2 திரைப்படத்தை இயக்க ஐடியா இருந்தது. ஆனால் அதற்கிடையே விஜய் அண்ணன் அரசியல் செல்வதாகக் கூறினார். லியோ படத்தின் தொடர்ச்சியை எழுதும்போது, அவர் அரசியலுக்குச் செல்வார் என்று எல்லாம் தெரியாது” என அவர் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.