யோகி பாபுவின் 300-வது படமான அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj released the Arjunan Per Pathu movie teaser : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது நடிப்பில் 300-வது படமாக உருவாகி உள்ள அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

யோகி பாபுவின் 300-வது படமான அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

அர்ஜுனன் பேர் பத்து

Published: 

18 Mar 2026 19:26 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் யோகி பாபு சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்தார். அப்போது அவரது கதாப்பாத்திரங்களுக்கு குறிப்பிட்ட பெயர்கள் கூட இல்லாமல் இருகும் இப்படி இருக்கும் சூழலில் அமீர் நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற யோகி என்ற படத்தில் நடித்ததற்கு பிறகு அவரை அனைவரும் யோகி பாபு என்று அடையாளப்படுத்தினர். மேலும் யோகி பாபுவும் தன்னை அப்படியே சினிமா துறையில் அடையாளப்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காமெடி நடிகராக தொடர்ந்து நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் வெளியான யாமிருக்க பயமே என்ற படத்தில் நடித்த பிறகு இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார் யோகி பாபு.

தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வரும் யோகி பாபு அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான கெணத்த காணோம் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்:

பான் இந்திய அளவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்தப் படம் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளியாகும் 300-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்திற்கு பிறகு எச். வினோத்தின் அடுத்த ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழில் ரீ மேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் – ஆர்.கே.சுரேஷ் சொன்ன அப்டேட்

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்