மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா எந்த ஓடிடியில் ரிலீசாக உள்ளது? அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ

Lokah chapter 1 Chandra: மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் எந்த ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா எந்த ஓடிடியில் ரிலீசாக உள்ளது? அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ

லோகா சாப்டர் 1 சந்திரா

Published: 

15 Oct 2025 15:38 PM

 IST

இந்திய சினிமாவைப் பொருத்தவரை மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது மலையாள சினிமா (Malayala Cinema) ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், ஃபீல் குட் படமாக இருந்தாலும், ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக இருந்தாலும், சைக்கோ த்ரில்லர் படமாக இருந்தாலும், ரொமாண்டிக் படமாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே தொடர்ந்து பாராட்டைப் பெற்று வருகின்றது. இந்த மலையாள சினிமாவைப் பொருத்தவரை பெரிய பட்ஜெட்டில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பல மடங்கு வசூல் செய்து தொடர்ந்து சாதனைப் படைத்து வருகின்றது.

அந்த வரிசையில் சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனைப் படத்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. ரூபாய் 30 கோடியில் உருவான இந்தப் படம் மலையாள சினிமாவைப் பொருத்தவரை பெரிய பட்ஜெட் படம் என்று அவர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் லோகா சாப்டர் 1 சந்திரா படம் உலக அளவில் ரூபாய் 300 கோடிகள் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூலைப் பெற்றப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் இருந்து 10 மடங்குகள் அதிகமாக் இந்தப் படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் லோகா சாப்டர் 1 சந்திரா படம்:

இந்த நிலையில் இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அதில் இன்னும் தேதி குறிப்பிடவில்லை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்

லோகா சாப்டர் 1 சந்திரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மற்ற மொழிகளை விட தமிழ் சினிமாவில் நடிப்பது எப்பவும் பெருமையானது – நடிகை மம்தா மோகன்தாஸ்