Dulquer Salmaan: துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் நோ சொன்ன படங்களின் நிலை இதுதானா?

Dulquer Salmaans Rejected Films : மலையாள சினிமா மூலம் நாயகனாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிகராக கலக்கிவருபவர்தான் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் ஒப்பந்தமாகி கைவிடப்பட்டு, பின் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Dulquer Salmaan: துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் நோ சொன்ன படங்களின் நிலை இதுதானா?

துல்கர் சல்மான்

Updated On: 

11 Jan 2026 09:44 AM

 IST

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மிக பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான படம்தான் காந்தா (Kaantha). இந்த படத்தை துல்கர் சல்மான் மற்றும் ராணா (Rana) இணைந்து தயாரித்து நடித்திருந்தனர். இந்த படமானது துல்கர் சலமானுக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் இவர் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துவருகிறார்.

இந்நிலையில் முன்னதாக தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி, பின் நடிகர் துல்கர் சல்மான் நிராகரித்த சில படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்படி துல்கர் சல்மான் நோ சொன்ன படங்கள் என்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் பட்டியளை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

நடிகர் துல்கர் சல்மானின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

இந்தியன் 2 திரைப்படம் (Indian 2) :

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் கடந்த 2024ல் வெளியான படம்தான் இந்தியன் 2. இதில் கமல்ஹாசன் அதிரடி வேடத்தில் நடித்திருந்த நிலையில், கடந்த 2024ல் வெளியான பெரிய பட்ஜெட் படமாக இது அமைந்திருந்தது. இதில் நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் சித்தார்த் நடித்திருந்த “வரதராஜன்” என்ற வேடத்தில்தான் முதலில் துல்கர் சல்மான் நடிக்கவிருந்தார். பின் இப்படத்திலிருந்து அவர் விலகிய நிலையில், இப்படம் விமர்சன ரீதியாக மக்களிடையே வரவேற்பைப் பெற தவறியது. மேலும் படம் இணையத்தில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் திரைப்படம் (Thug Life) :

நடிகர் துல்கர் சல்மான் இந்த தக் லைஃப் படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தார். இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இதில் 2வது நாயகனாக நடிகர் சிலம்பரசன் “அமரன்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதில் சிலம்பரசன் நடித்திருந்த அமரன் வேடத்தில்தான் முதல் முதலில் துல்கர் சல்மான் நடிக்கவிருந்தார்.

இதையும் படிங்க: சிறை படம் அன்பினால் நிரம்பி வழிகிறது – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம் பிரபு!

இது குறித்து அறிவிப்பும் வெளியான நிலையில், மற்றப் படங்களில் பிசியாக இருந்த காரணமாக மற்றும் சில காராணங்களால் இப்படத்திலிருந்து விலகினார். கடந்த 2025ல் ஜூன் மாதத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் பேசியிருந்த சர்ச்சை கருத்து காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பராசக்தி திரைப்படம் (Parasakthi) :

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் பராசக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக படத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பராசக்தி படம் முதலில் புறநானூறு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சூர்யா, நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. பராசக்தி படத்தில் அதர்வா நடித்திருக்கும் “சின்னதுரை” என்ற வேடத்தில்தான் துல்கர் முதலில் நடிக்கவிருந்தார். இப்படத்தை தயாரிப்பதிலிருந்தும், நடிப்பதிலிருந்தும் சூர்யா விலகிய நிலையில், இப்படம் கைவிடப்பட்டது. பின் சிவகார்த்திகேயனை கொண்டு பராசக்தி என இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையில் தற்போது வெளியான இப்படமும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் துல்கர் சல்மான் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து தொடர்ந்து மீம்ஸ்களாக இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் சமூகவலைதளப் பதிவு:

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!